பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

Added : பிப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஊட்டி பெண் எழுத்தாளருக்கு  சாகித்ய அகாடமி விருது

ஊட்டி : ஊட்டியை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு, கன்னட நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமைக்காக, சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

தேசிய மற்றும் மாநில அளவில், சிறந்த இலக்கிய படைப்புகள்; மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, ஊட்டியை சேர்ந்த சுசன் டேனியல் என்ற பெண் எழுத்தாளருக்கு, 2019ம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளருக்காக இந்த விருது கிடைத்துள்ளது. இவர், கன்னட மொழியில் வெளியான 'குசும பாலே' என்ற கன்னட நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக, சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருது குறித்து, சுசன் டேனியல் கூறியதாவது :மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து, ராஜினாமா செய்தேன். 25 ஆண்டுகளாக, ஊட்டியில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். சிறு வயது முதலே, நாவல் படிக்கும் ஆர்வம் என்னிடம் இருந்தது. அதில், 'குசும பாலே' என்ற கன்னட நாவல், என்னை அதிகமாக ஈர்த்தது. அந்த நாவலை கன்னட மொழியில் இருந்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, அந்த புத்தகத்தின் எழுதியவரின் அனுமதியுடன் அந்த நாவலை, 120 பக்கங்களில் மொழிபெயர்த்தேன்.எனது, முதல் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது, இவ்வாறு கூறினார்.

கடந்த 2010 ல் 'செங்கோல் இல்லாமல்; கிரீடம் இல்லாமல்' என்ற மலையாள நாவலை, தமிழில் மொழிபெயர்த்த, ஊட்டியை சேர்ந்த நிர்மாலயா மணி என்பவருக்கு, இந்த விருது கிடைத்துள்ளது. இதன் மூலம்,ஊட்டியை சேர்ந்த இருவர் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது ஊட்டிக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
26-பிப்-202018:01:18 IST Report Abuse
Emperor SR வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் முயற்சிகள்.. ஊட்டிக்கும் தமிழகத்திற்கும் பெருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X