டில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
டில்லிகலவரம், உச்சநீதிமன்றம், விசாரணை, வன்முறை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் வெடித்த வன்முறை தொடர்பாக நேற்று நள்ளிரவு டில்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சையை உடனடியாக அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


பலி எண்ணிக்கை அதிகரிப்பு


டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கம், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, திடீரென மோதல் வெடித்தது, வீடுகள், கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. சாலைகளில் டயர்களை எரித்ததால் போக்குவரத்து முடங்கியது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் வன்முறையாளர்கள் கோரதாண்டவமாடினர். குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்களும் இரு பிரிவாக பிரிந்து மோதி கொண்டனர். வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு இறந்த நிலையில் மேலும் 4 பேரது உடல்கள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அறிக்கை அளிக்க உத்தரவு

டில்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் வீட்டில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக போலீஸ், தன்வசமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். காயமடைந்தவர்கள் விவரம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிகிச்சை அளிப்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை குரு தேஜ் பகதூர் மற்றும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
26-பிப்-202016:58:14 IST Report Abuse
Subramanian Arunachalam மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற நீதிமான்கள் அனைவரும் சொன்னது . எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு . எனவே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் . இதில் யாரை விசாரணை செய்ய போகிறீர்கள் .நெருப்பில் என்னை வார்க்கும் வேலையை அழகாக செய்து உள்ளீர்கள் அதற்கான விலையே இப்போது பதினெட்டு உயிர்கள்
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
26-பிப்-202011:54:57 IST Report Abuse
Subburamu Krishnaswamy The action of the Supreme court is highly unsatisfactory. Why they are sending mediation teams and doing penchants?. Is it the duty of the courts? They have to follow the rule of the land and based on that judges must pass orders. Supreme court is not established for mediation. Safe guarding the law of the land and issuing proper orders is the need of the hour. Although everybody has the right to protest, it should not affect others at any cost. Protesters are threatening the governments. Both government and courts are acting as mute spectators.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
26-பிப்-202011:30:55 IST Report Abuse
Gandhi டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தானிகள் & பங்காளிகள் தான் கலவரம் செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X