'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் பாதிப்பு

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronovirus,  kovit19, china, unhrc, iran, minister,  கொரோனாவைரஸ், பாதிப்பு, கோரதாண்டவம்,  ஈரான்

இந்த செய்தியை கேட்க

உலகம் முழுவதும், 37 நாடுகளில், 80 ஆயிரம் பேர் 'கொரோனா' தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பலி எண்ணிக்கை, 2,715 ஆக அதிகரித்துள்ளது.

'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல், சீனாவை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோயின் கோரத் தாக்குதலால், உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ள நிலையில், தற்போது 35க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை, 2,715 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உயிரிழப்பு, பல ஆயிரங்களை தாண்ட வாய்ப்புள்ளதாகவும், அச்சம் நிலவுகிறது.


latest tamil news


அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில், மிகவும் ரகசியம் காக்கும் சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதிகபட்ச ரகசியம் காக்கப்படலாம் என உலக நாடுகள் கருதுகின்றன.எனினும், சீனாவில் மட்டும் தற்போது, 78 ஆயிரத்து 064 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களில் மட்டும், சீனாவில் புதிதாக 500 பேருக்கு நோய் தாக்கியுள்ளது; 70 பேர் இறந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட, 27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.


latest tamil news'பாண்டமிக்'


'கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, 'பாண்டமிக்' என,மருத்துவத்துறையினர் குறிப் பிடுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை, 'பாண்டமிக்' என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருகிறது.


ஈரான் அமைச்சருக்கு 'கொரோனா'


ஈரான் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 12 பேர் இறந்துள்ளனர். அந்நாட்டு சுகாதாரத் துறை இணை அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சியும் நோய் பாதிப்புக்கு ஆளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இருமியபடியே இருந்தார். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவரை, மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது, நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


latest tamil news


அரசு செய்தி தொடர்பாளர் அலி ரபீ கூறுகையில், ''ஈரானில், 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தீவிரமாக சுகாதார திட்டங்களை மேற்கொண்டு வந்த அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சியும், நோயின் பிடியில் சிக்கியது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.


latest tamil news'ஆன்லைன் ஷாப்பிங்' அதிகரிப்பு


நோயின் மையப்புள்ளியாக இருக்கும், சீனாவின் ஹுபே மாகாணத்தில், நோய் பீதி காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, ஆறு கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், அடைந்து கிடக்கின்றனர். இதேபோல், சீனாவின் பல மாகாணங்களிலும் மக்கள், வீட்டுக்கு வெளியே வர அஞ்சுகின்றனர். இதனால், வணிக வளாகங்கள் உட்பட பொது இடங்கள், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளன. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு ஆன்லைன், 'ஷாப்பிங்'கை மட்டுமே நம்பியுள்ளனர். புத்தகங்கள், யோகா தரைவிரிப்புகள், காண்டம், மருந்து விற்பனை அதிகரித்துள்ளதாக, ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

--நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
26-பிப்-202012:26:26 IST Report Abuse
Nathan இப்போ வருகிற பவுர்ணமியன்று வடக்கே ஹோலி கொண்டாடப்படும், ஏராளமான ஹிந்து மக்கள் மகிஷ்ச்சியுடம் பகலில் வண்ண நீர் பீய்ச்சியும், மாலையில் நெருப்பு மூட்டி அதன் முன் பாட்டுப் பாடி இனிப்பு உண்டு மகிழ்ந்தாலும் வழக்கம். பாவம் கொரோனா வைரசு, அதுவும் கலர் பொடியை பூசிண்டு ங்கே என்று விழிக்கும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
26-பிப்-202010:36:55 IST Report Abuse
சீனி கூட்டமாக ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது, முக்கியமாக வயதானவர்களுக்கு தான் பிரச்சனை. எனவே சவுதி அரசு ஆரோக்கியமாக இருப்பவர்களை மட்டும் ஹஜ் பயணத்திற்க்கு அனுமதித்தா நல்லது. தென்கொரியாவில் ஏதோ ஒரு சர்ச்சில் 4000 பேர் கலந்துகொண்ட பிரார்த்த்தணையில் 1000 பேருக்கு கொரோனா வந்துள்ளது என்ற செய்தி பீதியை கிளப்புகிறது, எனவே மக்கள் பெரிய அளவில் கூடும் இடங்களை தவிர்ப்பது ஆரொக்கியதிற்க்கு நல்லது.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-பிப்-202011:20:34 IST Report Abuse
Malick Rajaஉலக மக்கள் தொகையில் 40. முதல் 60%. வரை கொரோனா பரவ மேலதிக வாய்ப்புக்கள் இருப்பதாக W.H.O. அறிக்கை வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X