ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ‛ஆப்சென்ட்'

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் பெற்ற படுதோல்வி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்டுள்ள காங்., செயற்குழுவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் கலந்து கொள்ளாதது கட்சியினரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.



latest tamil news



காங்., கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய கட்சியான காங்கிரசால் டில்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. அத்துடன் ஓட்டு சதவீதமும் குறைந்துள்ளது.

இதற்கிடையில் கட்சி தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (பிப்.,26) நடக்கிறது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா வாத்ரா, ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


latest tamil news




latest tamil news


பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. அவர் தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகியது முதல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ராகுல் கலந்து கொள்ளாமல் இருந்து வருவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி தேர்தல் பிரசாரத்திலும் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாததும் தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என காங்., கட்சியினரே பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் நாட்டில் இல்லை என்றால் அவர் எங்கு சென்றார், எப்போது சென்றார் என்ற கேள்வியும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
27-பிப்-202006:14:59 IST Report Abuse
 Muruga Vel ஸ்வாமி சின்னத்தம்பி இருக்கிற நாட்டுக்கு போயிருக்கலாம்
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
27-பிப்-202004:51:42 IST Report Abuse
Mahesh திரும்பவும் பாங்காக்??
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-202003:08:19 IST Report Abuse
meenakshisundaram அஜித் டோவளைக்கண்டு பயந்து ஓடிட்டாரு ஏதோ ஒரு வெளி நாட்டுக்கு -அங்கே போயி குடி உரிமை கேட்கப்போயிருப்பாரு,மற்ற காங்.காரனுக்கு சொல்லவே இல்லே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X