தென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்?

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சியோல்: சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் பாதிப்பை அதிகளவில் எதிர்கொள்ளும் நாடாக, தென் கொரியா உள்ளது. கடந்த ஒரே வாரத்தில், 900க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இவ்வளவு விரைவாக கொரோனா வைரஸ் பரவ காரணம் என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.latest tamil newsகிறிஸ்துவ தேவாலயம்

பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, தென் கொரியாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
தென்கொரியாவில் உள்ள ஷிஞ்சியோன்ஜி என்ற கிறிஸ்துவ தேவாலயத்தில் தான் முதல் முதலில் வைரஸ் பாதிப்பு பரவ துவங்கியுள்ளது. அந்த ஆலய குழுவில் உள்ள 61 வயதான மூத்த உறுப்பினருக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம்.


latest tamil news


ஆலயத்தில் நடந்த ஒரு பிரார்த்தனைக் கூடத்தில் அவர் பங்கேற்ற போது, ஒரு பெண்ணிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தேவாலயம் பல்வேறு நாட்களில் நடத்திய பல பிரார்த்தனைகளில் அந்த பெண் கலந்துகொண்டுள்ளார்.
அவர் கலந்துகொண்ட பிரார்த்தனைகளில் பங்கேற்ற பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி வருகிறது. எனவே, அந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு வருகை தந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsரகசியம் காத்துள்ளனர்!

கடந்த, 1980ல் நிறுவப்பட்ட இந்த ஷிஞ்சியோன்ஜி தேவாலய குழுவில், 2.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரார்த்தனையின்போது உறுப்பினர்கள் அருகருகே மண்டியிட்டு அமரும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
'இந்த மதக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக்கொள்வார்கள். எனவே, இந்த வைரஸ் பாதிப்பை அவர்கள் ஆரம்பத்திலேயே வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்' என, தென்கொரிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsஅழுவதும்... பாடுவதும்!


தென்கொரிய தொற்று நோய் நிபுணர் மருத்துவர் லியோங் ஹோ கூறுகையில், 'தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைகளின்போது மக்கள் பாடல்களை பாடுகின்றனர். ஒரு சிலர் அழுகின்றனர். அப்போதும் உமிழ்நீர் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது' என்றார்.
எனவே, தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த, பிரார்த்தனை கூட்டங்களை முடக்கியுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையளித்துள்ளனர். அதிகப்படியான ஊழியர்கள் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
02-மார்-202006:55:04 IST Report Abuse
Nathan தென்கொரியாவில் உள்ள ஷிஞ்சியோன்ஜி என்ற கிறிஸ்துவ தேவாலயத்தில் தான் முதல் முதலில் வைரஸ் பாதிப்பு பரவ துவங்கியுள்ளது. அந்த ஆலய குழுவில் உள்ள 61 வயதான மூத்த உறுப்பினருக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிறைய பாவ மன்னிப்புகள் கொடுத்து பரம சுகமான ஸ்பிரிட்டின் எபாக்டயும் சேர்த்தே கொடுத்து விட்டாரோ.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
29-பிப்-202012:22:28 IST Report Abuse
madhavan rajan உடனே பால் தினகரன் குடும்பத்தை அங்கு அனுப்பி சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தினால் அங்கு எல்லோருக்கும் சுகம் கிடைக்கும். செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-பிப்-202004:46:34 IST Report Abuse
 nicolethomson என்ன கொடுமை சரவணா இது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X