வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு போலீசாரின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லியில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்யக் கோரியும், முன்னாள் தகவல் ஆணையர் வஜஹாத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று(பிப்.,25) இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோது, அவசரமாக விசாரிக்கும்படி, வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை, இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறுகையில், போலீசாரின் மெத்தனம் தான் வன்முறைக்கு காரணம். போலீசார் சரியாக செயல்பட்டிருந்தால், வன்முறையை தவிர்த்திருக்கலாம். டில்லியில் வடகிழக்கு பகுதியில் நடந்தது எல்லாம் துரதிர்ஷ்டவசமானது எனக்கூறினர்.

மத்திய அரசின் வழக்கறிஞர் கூறும் போது, டில்லி போலீசை சேர்ந்த ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறினார். இதற்கு நீதிபதிகள், இதையே தான் நாங்களும் கேட்கிறோம். நிலைமையை இவ்வளவுதூரம் கைமீறி போனது ஏன்? டில்லி கலவரத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த போராட்டம் தொடர்பான தேவையில்லாத அம்சங்களை விசாரிக்க போவதில்லை. பொது சாலைகளில் காலவரையின்றி போராட்டம் நடத்தக்கூடாதுஎனக்கூறி, வழக்கை மார்ச் 23க்கு ஒத்திவைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE