ராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி : டில்லி ஜாப்ராபாத் கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் ராணுவ வீரர்கள் அணிவது போன்ற போர் உடை உணிந்திருந்தது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு ராணுவம் கடிதம் எழுதி உள்ளது.



latest tamil news



சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது டில்லியில் கடந்த 3 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த கலவரத்தை அடக்குவதற்காக துணை ராணுவம் அல்லது டில்லி போலீசார் ராணுவ வீரர்கள் போரின் போது அணிவது போன்ற உடையை அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நிலையில் அல்லது பயங்கரவாதத்தை பாதிக்கபட்ட பகுதிகளை கையாளும் போது ராணுவம் போன்ற உடையை அணிவது சரியாகாது என ராணுவம் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news



இத்தகைய சூழலில் மாநில போலீசார் வேறு நிறத்தில் உடையணிய கடுமையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டு துளைக்காத உடைகளும் பெரும்பாலும் ராணுவ போர் உடையிலேயே இருப்பதாகவும், அதனை காக்கி நிறத்திலேயே பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தனி நபர்கள் கூட ராணுவ உடையை திருடி, தவறாக பயன்படுத்த வழி இருப்பதால் இந்த கட்டுப்பாட்டை விதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X