அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம்: முதல்வர் இ.பி.எஸ்., ஆவசேம்

Added : பிப் 26, 2020
Share
Advertisement
தஞ்சாவூர்: சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை ஒரு போதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது. பச்சைத் துண்டு போட்ட விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.தஞ்சாவூரில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா, தமிழக முதலமைச்சர்
eps, edapadipalanisamy, edapadik.palanisamy, cmeps, stalin, m.k.stalin, farmers, o.paneerselvam, ops, g.k.vasan,vasan, இபிஎஸ், முதல்வர் இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிகே.பழனிசாமி, ஸ்டாலின், விவசாயி, திமுகதலைவர்ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ஒபிஎஸ், வாசன்

தஞ்சாவூர்: சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை ஒரு போதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது. பச்சைத் துண்டு போட்ட விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தஞ்சாவூரில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மாநில மாநில செயலாளர் கருப்பு.முருகானந்தம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், அப்படி, மக்களாகிய உங்களால் முதல்வராக இருக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது. நாள்தோறும் எங்களைப் பற்றி நாங்கள் விளம்பரம் செய்து கொள்ள தேவையே இல்லை, ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என தெரியவில்லை, நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், அப்படியொன்றால் நான் விவசாயி என்று தானே சொல்ல வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை.


latest tamil news




விவசாயி என்றால் பெருமையான விஷயம், அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் அல்ல விவசாயிகள், மற்றவர்களெல்லாம் பிறரை சார்ந்திருக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் மட்டும் தான் சொந்தக்காலில் நிற்பார்கள், அடுத்தவரிடம் கையேந்தாத கூட்டம். சொந்த காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது. இரவு - பகல் பாராமல், மழை-வெயில் என பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம், பச்சை துண்டு போட்டவார் எல்லாம், விவசாயி இல்லை என ஸ்டாலின் சொல்கிறார், பச்சை துண்டு போடுவதற்கும் தனி தகுதி வேண்டும் இவ்வாறு முதல்வர் பேசினார்.

பின்னர் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தஞ்சை தரணி மீது ஜெயலலிதா அன்பும் பாசமும் எவ்வளவு வைத்திருந்தார் என்பது இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியும். தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி, இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் இருந்தது. மக்களின் பயத்தை போக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேசியதாவது; டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுக்காக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். ஒட்டு மொத்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆட்சியாக உள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு விவசாயி முதல்வராக பதவி ஏற்று வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X