சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
மும்பை : டில்லியில் நடந்துள்ள வன்முறை 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.டில்லி வன்முறை தொடர்பாக சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், டில்லியில் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. வாள், கம்பு, துப்பாக்கியுடன் தெருக்களில் இறங்கி போராடிய மக்களின் ரத்தம் சாலையில் சிதறி

மும்பை : டில்லியில் நடந்துள்ள வன்முறை 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.latest tamil news


டில்லி வன்முறை தொடர்பாக சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், டில்லியில் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. வாள், கம்பு, துப்பாக்கியுடன் தெருக்களில் இறங்கி போராடிய மக்களின் ரத்தம் சாலையில் சிதறி கிடக்கிறது. டில்லி நிலையை பார்க்கும் போது ஒரு திகில் படம் பார்ப்பது போன்றும், 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தை கண்முன் நினைவுபடுத்துவது போல் உள்ளது.


latest tamil news


டில்லியில் சட்ட-ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு தோற்று விட்டது என்பதை அப்பட்டமாக காட்டுவதாக இந்த வன்முறை சம்பவம் உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட வன்முறையின் போது நூற்றுக்கணக்கான சீக்கியவர்கள் கொல்லப்பட்டதற்கு காங்., காரணம் என இப்போது வரை பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. டில்லியில் நடந்த கலவரத்திற்கு யார் பொறுப்பு என்பதை தெரிவிக்க வேண்டும். மிரட்டுவது போலவும், எச்சரிப்பது போலவும் சில பா.ஜ., தலைவர்களின் பேச்சு அமைந்துள்ளது.


latest tamil news


மோடியும்-டிரம்ப்பும் சந்தித்து இந்தியாவுடன் அன்பை பகிர்ந்து கொண்ட சமயத்தில் தலைநகர் டில்லி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரத்தகளறி ஆகி, பற்றி எரிந்துள்ளது. டில்லி வரும் டிரம்ப்பிற்கு திகில் படம் போன்ற வன்முறை, தெருக்களில் ரத்தகளரி, மக்களின் அலறல், கண்ணீர் புகை குண்டுகளால் வரவேற்பு அளிக்கப்படும் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. ஆமதாபாத்தில் டிரம்ப்பிற்கு நமஸ்தே, டில்லியில் வன்முறை. டில்லியில் இது போன்ற மதிப்பை கெடுக்கும் சம்பவம் இதற்கு எப்போதும் நடந்தது இல்லை.

இந்த வன்முறைக்கு பின்புலமாக இருப்பது யார் என உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிஏஏ நாட்டின் பாதுகாப்பை சீரழிக்கும் என உள்துறைக்கு தெரியாதா?சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட போது கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்த போது, இப்போதும் கட்டுப்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. டிரம்ப் நாட்டை விட்டு புறப்படும் வரையிலாவது வன்முறையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். டில்லி தேர்தலில் பா.ஜ., தோற்ற பிறகு வன்முறை வெடித்துள்ளது மர்மமாக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
27-பிப்-202007:27:21 IST Report Abuse
mindum vasantham இவனுங்க சோனியா சேனா ஆகி ரொம்ப நாளாச்சு
Rate this:
Cancel
26-பிப்-202018:30:15 IST Report Abuse
நக்கல் இவர் சொல்லுவதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.... ரெண்டு கலவரத்துக்கும் காரணம் காங்கிரஸ்தான்...
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
26-பிப்-202016:25:27 IST Report Abuse
Ramesh Uddhav is not knowing the difference between RIOTS and ETHNIC CLEANSING (1984 and 1989)...
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
26-பிப்-202019:25:52 IST Report Abuse
KumarOh u know the difference ?. I am pitty on you....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X