டில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்?

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
DelhiCAAClashes, DelhiBurns, Isupportdelhipolice, WeSupportCAA, delhivoilence, DelhiRiots2020,police,  saheenbagh,  வன்முறை, டில்லிவன்முறை, டில்லி, உச்சநீதிமன்றம்,  போலீஸ், டில்லிபோலீஸ், மெத்தனம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த 72 மணி நேரமாக நடந்த வன்முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்துவதில், போலீஸ் தலைமைக்கு அனுபவம் இல்லாதது; தலைமை மீது கீழ் நிலை போலீசாருக்கு நம்பிக்கை இல்லாதது; கள நிலையை தொடர்ச்சியாக ஆராயததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டில்லியில் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்னர், டில்லியின் வடகிழக்கு பகுதிகளில உள்ள ஜாப்ராபாத், யமுனா நகர், கஜூரிகாஸ் பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடுபவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதி கொண்டனர். கற்களை வீசி தாக்கினர்.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டில்லி வன்முறையை கட்டுப்படுத்த டில்லி போலீசார் தவறியது குறித்து நடந்த கள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லியில் பணிபுரியும் பெரும்பாலான துணை கமிஷனர்களுக்கு வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து அனுபவம் இல்லை. 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், அத்வானி ரத யாத்திரை போது ஏற்பட்ட பதற்றம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 1992 ல் ஏற்பட்ட கலவரம் ஆகியவற்றிற்கு பின் டில்லியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. உதவி கமிஷனர்கள், தங்களது வாழ்நாளில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கவே மாட்டார்கள்.


latest tamil newsதற்போதைய போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கும், தனது பணி நாளில் பெரும்பாலான நாட்கள் குற்றப்பிரிவு, விஜிலென்ஸ் அல்லது நிர்வாக பணிகளில் தான் இருந்துள்ளார். பல மாதங்களாக அவரது தலைமை பண்பு சோதனைக்கு உள்ளாகி வந்துள்ளது. அவர், வழக்கறிஞர்களால் தாக்குதலுக்கு உள்ளான போலீசாரை உற்சாகபடுத்தியிருக்க வேண்டும்.

ஜேஎன்யு மாணவர்கள் மீது முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் சம்பவத்தின் போது போலீசார் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முறையாக கையாண்டிருக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ஜாமியா பல்கலை நூலகத்திற்குள் சென்று போலீசார் தாக்கியது ஏன் என்பதற்கு, உரிய முறையில் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கமிஷனர் எதையும் செய்யவில்லை. தற்போது வடகிழக்கு டில்லி சூழ்நிலையை போலீசார் தவறாக கையாண்டனர். அமைதியை நிலைநாட்ட போலீசார் திணறுவது ஏன் என்ற கேள்விகளை அவர் சந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு டில்லியில் போலீசாரை வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கினர். அப்போது, உயரதிகாரிகளுக்கும், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி நன்றாக தெரிந்தது. தங்களது உயரதிகாரிகள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற பயத்தில், இளநிலை அதிகாரிகள் அவசர கதியில் முடிவுகளை எடுத்தனர். வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்திய பின்னர், இரண்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். அப்போது, போலீசாரின் போராட்டத்தை அமுல்யா பட்நாயக் சந்திக்க நேரிட்டது. போலீசார் போராட்டம் நடத்துவது அவர்களின் வரலாற்றில் அதுவே முதல்முறை. ஆனால், கீழ்மட்ட அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த கமிஷனர் தவறிவிட்டார் என சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


latest tamil newsகலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு மற்றொரு காரணம், போலீசுக்கு தகவல் சொல்பவர்கள் போதுமான அளவுக்கு இல்லாதது. பதற்றத்திற்கு உள்ளான பகுதிகளில் உள்ள சமூக தலைவர்கள், மத தலைவர்கள் மத்தியில் போதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தகவலகளை பெறுவதற்கு போலீசார் தவறிவிட்டனர். முன்னர் கள நிலவரங்களை ஆராய்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், இந்த முறை அப்படி செய்தது போல் இல்லை என தெரிகிறது என பணியில் உள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.

டில்லி போலீசாரை போலவே, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.பி., உளவுப்பிரிவினரும், டில்லியில் சூழ்நிலையை கணிக்க தவறிவிட்டனர். தொடர்ந்து பல தவறுகளை சந்தித்தபோதும், போலீசாரை, உள்துறை அமைச்சகம் முடுக்கி விடாதது ஆச்சர்யமாக உள்ளதாக சில அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு அந்த கள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அதிகாரி கூறுகையில், நடந்த சம்பவங்களை பார்க்கும் போது, வன்முறை நடந்த இடங்களில், கூட்டத்தை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிமுறைகள், திட்டங்கள் போலீசாரிடம் இல்லை என்பது தெரிகிறது. வன்முறை பாதித்த பகுதிகளில், தடை உத்தரவை டில்லி போலீசார் பிறப்பிக்காதது ஏன்? அப்படி செய்திருந்தால், உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறைத்திருக்க முடியும் என்றார்.


latest tamil newsபெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், டில்லியில் நடப்பதை பார்க்கும் போது, போலீசில் பணிபுரிந்ததை நினை த்து வேதனைப்படுகிறேன். மாணவர்களை அடிக்க போலீசாரை எப்படி கமிஷனர் அனுமதித்தார். உங்களது ஆட்கள் தாக்கப்படும் போது எதையும் செய்யவில்லை. இந்தியாவில் டில்லி போலீசார் முதலிடத்தில் இருந்தனர். தற்போது, எந்த இடத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
26-பிப்-202018:05:55 IST Report Abuse
Mahesh எது செய்தாலும் போலீசை குறை சொல்லும் கோர்ட் தான் காரணம். ஒரே மாதிரியான நிலைப்பாடு கிடையாது. தவறாக பேசுபவர்களை கைது செய்தால், சட்டம் தெரியுமா? பேச உரிமை இல்லையா என்று பெரிய கேள்வி... கைது செய்யாமல் இருந்து கலவரங்கள் நடந்தால், ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம்.. அதனால் முதலில் கோர்ட் ஒரு விஷயத்தை - எது பேச்சுரிமை, எது மாறுபட்ட கருத்து, எதுவரை போராட்டங்களை அனுமதிக்கலாம்? தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இவை கோர்ட் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்று அரசிடம் விட்டுவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
26-பிப்-202018:03:55 IST Report Abuse
manivannan அரசியல்ல இதுவெல்லாம் சாதாரணாம்ப்பா
Rate this:
Share this comment
Cancel
NILAVAN - Tirunelvei,இந்தியா
26-பிப்-202017:48:03 IST Report Abuse
NILAVAN கடவுள் இருக்கான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X