இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : டில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,வின் சதி உள்ளதாக காங்., இடைக்கால தலைவர் சோனியா குற்றம்சாட்டி உள்ளார்.

காங்., செயற்குழு கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சோனியா பேசுகையில், டில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,வின் சதி உள்ளது. டில்லி தேர்தலின் போதும் இதே போன்று நடந்ததை நாடே பார்த்தது. வன்முறையை தூண்டும் விதமாகவும், அச்சம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பா.ஜ., தலைவர்கள் பேசி வருகின்றனர்.

டில்லியின் தற்போதைய நிலைக்கு மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சருமே பொறுப்பு. டில்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், பலர் காயமடைந்த போதும், பலர் உயிரிழந்த நிலையிலும் 72 மணி நேரமாக டில்லி போலீஸ் கையை கட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
வடகிழக்கு டில்லியில் உள்ள தெருக்களில் வன்முறை இன்னும் தொடர்ந்து வருகிறது. அமைதியை காக்க தவறிய டில்லி முதல்வர் மற்றும் அவரது அரசிற்கும் சமபங்கு பொறுப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஒட்டுமொத்த தோல்வியே தலைநகரை மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு தள்ளி உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய காங்.,ன் ரன்தீப் சுர்ஜிவாலா, இந்த வன்முறையை கண்டித்து காங்., சார்பில் நாளை பேரணி நடத்தப்படும். பேரணியாக சென்று ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE