இந்த செய்தியை கேட்க
கோடா : ராஜஸ்தானில் தனியார் பஸ் ஒன்றில் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானின் புந்தி மாவட்டத்தில் கோடாவில் இருந்து தவுசா பகுதிக்கு சென்ற தனியார் பஸ், பாலத்தின் மீது பயணித்த போது நிலை தடுமாறி, மைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த பஸ்சில் மொத்தம் 28 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில், பஸ்சில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் கோடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆற்றில் கீழ் பகுதியில் அதிக நீர் நிறைந்த ஆழமான பள்ளம் இருந்ததும், பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் ஏதும் இல்லாமல் இருந்ததே விபத்து ஏற்படும், அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE