மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்: கெஜ்ரி.,க்கு ஐகோர்ட் வலியுறுத்தல்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: வடகிழக்கு டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டில்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.டில்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், யமுனா நகர், கஜூரிகாஸ் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
DelhiViolence, DelhiHighcourt, Kejriwal, CAA, Arvind Kejriwal, CM, டில்லி, வன்முறை, டில்லி ஐகோர்ட், கெஜ்ரிவால், சிஏஏ, குடியுரிமை சட்டம், முதல்வர், உயர்நீதிமன்றம்

புதுடில்லி: வடகிழக்கு டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டில்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

டில்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், யமுனா நகர், கஜூரிகாஸ் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. கற்களை வீசி தாக்கினர். இதில், இதுவரை ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நினைவுப்படுத்தியது.


latest tamil news


இந்த வன்முறை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், வன்முறை நடந்த பகுதிகளை செல்ல வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வலியுறுத்தினர். நீதிபதிகள் கூறியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு டில்லி முதல்வர், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இதுவே சரியான தருணம். பாதுகாப்பாக இருப்பதை மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.


latest tamil news


வடகிழக்கு பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. 1984ல் நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சம்பவத்தை உருவாக்கிவிட கூடாது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் இதுபோன்ற வன்முறையை மீண்டும் அனுமதிக்க கூடாது. நாம் அனைவரும் கவனமுடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
27-பிப்-202011:16:07 IST Report Abuse
Vivekanandan Mahalingam கெஜ்ரிவால் உடனடியாக ராவுவதை அழைக்காமல் காலம் தாழ்த்தியதே இவ்வ்வளுவுக்கும் காரணம் . மேலும் உச்ச நீதி மன்றம் ஏன் ரோட்டில் அமர்ந்தவர்களை அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை? இந்தியா முழுவதும் எந்த கட்சி எந்த மதத்தினருக்கும் ரோட்டில் அமர்ந்து போராட அனுமதிக்க கூடாது
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
27-பிப்-202007:36:32 IST Report Abuse
rauf  thaseem கெஜ்ரிவால் வென்றது யாருக்கும் பிடிக்கவில்லை ,இந்த கேள்வியை அமித் ஷாவுக்கும் , மோடி அரசுக்கும் சொல்லியிருக்கலாமே ,
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
27-பிப்-202006:11:30 IST Report Abuse
rajan டெல்லி மக்கள் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் அதிகார போட்டியில் ஆளுநருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றத்துக்கு இப்போது முதல்வர் செயல்படவேண்டும் என்று ஆலோசனை சொல்லும் தார்மிக உரிமை இல்லை முழு போலீஸ் நிர்வாகத்தை டெல்லி அரசுக்கு கொடுத்துவிட்டு இந்த ஆலோசனை சொல்லலாம் போலீசும் ias அதிகாரிகளும் டெல்லி மாநில அரசுக்கு எதிராக செயல் படும்போது நீதிமன்றம் மௌனமாக இருந்துவிட்டு இப்போது பழியை போடபலியாடு தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X