டில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெனிவா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டில்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது.


latest tamil news



இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 'இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்' என, அஞ்சப்படுகிறது.



latest tamil news



இந்த நிலையில், ஐ.நா., சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டை காக்க வேண்டும். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், டில்லியில் கலவரம் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். டில்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-பிப்-202010:38:55 IST Report Abuse
Rasheel இலங்கையில் 3 லக்ஷம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்த சபை எங்கு இருந்தது. பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்இல் நடக்கும் இன அழிப்பு பற்றி இந்த கோமாளியின் கருத்து என்ன?
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
27-பிப்-202006:47:36 IST Report Abuse
siriyaar அமெரிக்கா பெட்ரோல் திருடறதுக்கு வேண்டி இராக் இரான் மீது தாக்குதே அது நோகலயோ , ஓ அவங்க எழதி கொடுக்கலையா,, ஐநாவிற்கு முதலில் விடுதலை வேண்டும் ஐநா அடிமையாக இருக்கிறது.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
27-பிப்-202005:39:19 IST Report Abuse
Raja கவலையா இருந்தா ஒரு குவாட்டரை போட்டுட்டு குப்புறபடுத்து தூங்கு அண்ணாத்தே. எங்க பிரச்னையை நாங்க பாத்துக்குவோம். பாகிஸ்தான்ல இந்துக்களை கொல்றத பத்தி கவலைபட்டிருக்கியா? என்ன செஞ்ச?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X