பொது செய்தி

தமிழ்நாடு

உளவுத் துறை, உள்துறையின் தோல்வி தான் டில்லி வன்முறைக்கு காரணம்: ரஜினி

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (186)
Share
Advertisement
RajiniKanth,DelhiViolence,Delhiriots,Rajini,Condemn, CentralGovt, டில்லி, வன்முறை, ரஜினிகாந்த், ரஜினி, கண்டனம், உளவுத்துறை, மத்திய அரசு

இந்த செய்தியை கேட்க

சென்னை: ''உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி தான், டில்லியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணம்,'' என, நடிகர் ரஜினி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள, தன் இல்லத்திற்கு வெளியே, அவர் பேட்டி அளித்தார். கடந்த முறை ரஜினி அளித்த பேட்டி, ஊடகங்கள் அனைத்திலும் வெளியான உடன், 'எப்போதாவது கதவை திறந்து பேட்டி கொடுத்து, படப்பிடிப்பு போவோருக்கு எல்லாம், தலைப்பு செய்தி போடுகின்றனர்' என, தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் குமுறி இருந்தார்.

நேற்று ரஜினி, மீண்டும் கதவை திறந்து, பேட்டி அளித்தார். அதில், 'டில்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சத்தின் தோல்வி தான் காரணம்' என, பா.ஜ.,வை சாடினார்.பல உண்மைகளை, 'பிட்டுப் பிட்டு' வைத்த, அவர் பேட்டி: 'தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக நிற்பேன்' என்று நான் கூறினேன். அந்த நிலைநாட்டில் உறுதியாக இருக்கிறேன்.

டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்

டில்லியில் நடக்கும் போராட்டங்கள், மத்திய உளவுத் துறையின் தோல்வியை காட்டுகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருந்த நேரத்தில், உளவுத்துறையினர் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில் உளவுத் துறை சரியாக வேலை செய்யவில்லை. போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும். இனியாவது ஜாக்கிரதையாக இருப்பர் என,எதிர்பார்க்கிறேன்.

உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி தான், வன்முறைக்கு காரணம். சில கட்சிகள், சில மதங்களை வைத்து போராட்டங்களை துாண்டுகின்றனர். இது சரியான போக்கு கிடையாது. மத்திய அரசு இதை ஒடுக்கவில்லை என்றால், வரும்காலத்தில் பிரச்னை ஆகிவிடும். இந்த பிரச்னையில், ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும் என்று, கை வணங்கி கேட்டு கொள்கிறேன்.


latest tamil newsதேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, உச்சநீதிமன்றம் சென்று சட்டமாக்கி விட்டனர். எனவே, அதை திரும்ப பெற மாட்டார்கள். இனி எந்த போராட்டம் நடத்தினாலும், பிரயோஜனப்படாது.இதை சொல்வதற்காக, நான் பா.ஜ.,வின் ஆள்; என் பின்னால் பா.ஜ.,வினர் இருக்கின்றனர் என்று கூறுவர்.

சில மூத்த பத்திரிகையாளர்கள், இப்படி சொல்வது வேதனை அளிக்கிறது. என்ன உண்மையோ, அதைத்தான் நான் சொல்கிறேன். இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது, என் அன்பான வேண்டுகோள்.தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து, அவர்கள் தெளிவாக கூறிவிட்டனர்; அதில் குழப்பமில்லை. அதை இன்னும் செயல்படுத்தவில்லை.

மத்திய, மாநில அரசுகள், போராட்டங்களை சரியாக கையாள வேண்டும். போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அமைதி வழியில் போராட்டம் செய்யலாம். அதில், வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது.இவ்வாறு, நடிகர் ரஜினி கூறினார்.


இந்த வழிதான் நல்ல வழி! ரஜினிக்கு கமல் பாராட்டு


டில்லி வன்முறை தொடர்பாக, மத்திய அரசை கண்டித்த ரஜினிக்கு, நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, மத்திய அரசைக் கண்டித்தார். இதை, மக்கள் நீதிமைய தலைவர், நடிகர் கமல் வரவேற்றுள்ளார். அவரது பதிவு, ரஜினியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாக உள்ளது.


கமலின் டுவிட்டர் பதிவு:


சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே. அப்படி வாங்க... இந்த வழி நல்ல வழி; தனி வழி அல்ல. ஒரு இனமே, உங்களின், ராஜபாட்டைக்கு ஏற்ப நடக்கும். வருக... வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (186)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
28-பிப்-202002:01:35 IST Report Abuse
Sathyanarayanan Subramanian உளவுத்துறை எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிர்பலி ஏற்பட்டிருக்காது. இந்த துறையில் உள்ள தோல்வி தான் காரணம்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
28-பிப்-202001:46:44 IST Report Abuse
Panneerselvam Chinnasamy வருமுன் காக்க சொல்லுகிறார் ரஜினி.... இதில் பிரச்சினை என்னவென்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்தாலும் அடக்குமுறை என்பார்கள். ஜனநாயகத்தில் ஆட்சி செய்வது என்பது tight rope walk.
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
27-பிப்-202023:39:00 IST Report Abuse
SIVA G  india முன் உதாரணங்கள் பலமுறை மதக்கலவரங்கள் நடந்து உயிர் பலியாகியுள்ளன.. இவையாவும் ஒரு நாளில் திடீரென வரவில்லை.ஓவ்வொரு நாளும் உஸ்ணம் ஆவது தெரிந்தே எல்லா மதத்தலைவர்களும் அமைதி படுத்தாது கண்டு கொள்ளாமல் விட்டதின் விழைவுகளே. இனி சர்வமத அமைதி பேரணி என தங்களை பெருமை படுத்திகொள்ள அமைதி ஊர்வலம் மட்டுமே செல்வார்கள். உயிர் பலியும், வலியும் பல ஆண்டுகள் அந்த குடும்பங்களுக்கு வடுவாக இருக்குமே. நீதித்துறை இனி அரசு,காவல்துறை அல்லாமல் வருங்காலங்களில் அரசியல் தலவர்களுக்கும்,ஆன்மீக தலைவர்களுக்கு முன்கூட்டியே அமைதி ஏற்படுத்த அறிவுருத்தும் என நம்பவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X