சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு -

Added : பிப் 26, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு -

காங்கிரஸ் எம்.பி., ராகுல்: டில்லி கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு, அமைதி வழி போராட்டமே அவசியம். வன்முறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வும் கிடைக்காது. வன்முறையை கைவிட்டு, கலவரக்காரர்களிடமிருந்து டில்லிவாசிகள் விலகியிருக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'டில்லியில் நடந்தது போன்ற கலவரம், வன்முறை, கிளர்ச்சி நாடு முழுவதும் ஏற்பட வேண்டும்; அதன் மூலம், மத்திய அரசு ஆட்டம் காண வேண்டும்' என்பது தானே, உங்களைப் போன்ற எதிர்க்கட்சிகளின் எண்ணம். இதைத் தான், இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களோ என்ற, 'டவுட்' உங்கள் அறிக்கையால் எழுகிறது!

தி.மு.க., தலைமை அமைப்புச் செயலர் நேரு: விவசாய நிலங்களில், உயர் மின் கோபுரங்களை அமைத்து, விவசாயிகளின் வேளாண் நிலத்தை சிதைத்து, சின்னாபின்னப்படுத்தியது யார்; முதல்வர் இ.பி.எஸ்., தன்னை விவசாயி என, சொல்லிக் கொள்வதால், உண்மையான விவசாயிகள் தலை கவிழ்கின்றனர். ஒரு ஊழல்வாதி, விவசாயி என, சொல்லிக் கொள்வதை, விவசாயிகள் விரும்பவில்லை.

'டவுட்' தனபாலு: 'விவசாயிகள் விரும்பவில்லை' என, நீங்கள் கூறும் தகவல், உங்களின் தகவல்; நீண்ட நாட்களாக சொல்ல விரும்பிய தகவல் என்பது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிந்திருக்கும். அதுபோல, எப்படியாவது, ஏதாவது விவகாரத்தை எழுப்பி, முதல்வரை சகட்டு மேனிக்கு விமர்சிக்க வேண்டும் என்ற உங்கள் கட்சியின் எண்ணமும், டவுட் இல்லாமல் புரிகிறது. சரி, வழக்கமாக, ஸ்டாலின் தானே அறிக்கை விடுவார்; நீங்கள் விட்டுள்ளீர்களே!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார சீரழிவு, அ.தி.மு.க., அரசின் டாஸ்மாக் வியாபாரம் ஆகியவற்றால், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையால், பெண்கள் தங்கள் கரு முட்டையை விற்பனை செய்யும், அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் நடக்கிறது.

'டவுட்' தனபாலு: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இத்தனை நாட்கள் நீங்கள் குரல் கொடுத்தும், தமிழக அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், உணர்ச்சிப்பூர்வமான இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், நீங்கள் சொல்லும் விவகாரம் மிகவும் பயங்கரமானதே; இதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை அவசியம் என்பதில், 'டவுட்'டே இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X