பொது செய்தி

இந்தியா

நாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு தயங்கியதில்லை:ராஜ்நாத்

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
RajnathSingh, Balakot Anniversary, IndianForces, Cross Border, ராஜ்நாத்சிங், பாதுகாப்பு அமைச்சர், பாஜ, பாஜக, பாரதீயஜனதா, பாலகோட், தாக்குதல், பயங்கரவாதம்,

புதுடில்லி: நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்.,கின் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்தது. இது நடந்து ஓராண்டு ஆனதையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் முதலாம் ஆண்டுவிழாவை இந்தியா இன்று கொண்டாடுகிறது. இது அச்சமற்றவர்களால் தொடங்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கையாகும். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதை வலுவாக நிரூபித்துள்ளது.


latest tamil news


பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் போது இந்திய விமானப்படையின் ஒப்பற்ற துணிச்சலையும் தைரியத்தையும் வணங்குகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வித்தியாசமான அணுகுமுறையை கொண்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்கியதில்லை. பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவந்த மோடிக்கு நன்றி. 2016ம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் 2019ன் பாலகோட் வான்வழித் தாக்குதல்களே இதற்கு சான்றாகும். இந்த மாற்றத்திற்கு சான்றாகும். இது நிச்சயமாக ஒரு புதிய, நம்பிக்கையான இந்தியாவை உருவாக்கியுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
27-பிப்-202011:23:37 IST Report Abuse
ஜெயந்தன் மக்கள் என்றுமே பாகிஸ்தானை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..ஆனால் இவனுங்கதான்...ஆட்சிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பாகிஸ்தானை பற்றி பேசி பேசியே....இங்கே நடக்கும் அவலங்களை மறைத்து விட முயல்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
27-பிப்-202010:39:09 IST Report Abuse
sahayadhas சும்மா சண்ட செய்யுங்க சார் அமெரிக்காவிடம் வாங்கிய வாங்க போகிற பொருளின் பங்கு கிடைகின்ற வரை.
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
27-பிப்-202006:21:09 IST Report Abuse
Siva You can hide behind "தமிழ்" , "தமிழ்" names. But you always stand out. It's the motives that show who you are. Everyone is entitled to their views, but WE KNOW My only advice is "keep an mind".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X