பொது செய்தி

தமிழ்நாடு

திருவானைக்காவலில் 505 தங்க காசுகளுடன் புதையல் கண்டெடுப்பு

Updated : பிப் 26, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
திருவானைக்காவல், கோவில், தங்கப்புதையல், தங்க காசு

திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில், நந்தவனம் அமைக்க குழி தோண்டிய போது, தங்கப்புதையல் கிடைத்தது.

திருச்சி, திருவானைக்காவலில், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி முன் உள்ள வாழைத் தோட்டத்தை, நந்தவனமாக மாற்றுவதற்கான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகளுக்கு, குழி தோண்டிய போது, 1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது. பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


latest tamil news


கோவில் நிர்வாக அதிகாரிகள், பித்தளை கூஜாவை திறந்து பார்த்த போது, அதனுள் நுாற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. வருவாய்த் துறை அதிகாரிகள், தங்க நாணயங்களை சரி பார்த்தபோது, அதில், 1,716 கிராம் எடையில், 505 நாணயங்கள் இருந்தன. கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர், தங்க நாணயங்கள் மற்றும் கூஜாவை, அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-பிப்-202011:42:13 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan அம்மனுக்கு அழகான ஒரு காசுமாலையாக வடிவமைத்து கோவில் பெட்டகத்தில் இணைக்கலாமே....Return back to temple , this is not government property , this gold is temple property ...
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
27-பிப்-202017:30:13 IST Report Abuse
Covim-20 ஆட்டையை போடும் துறைக்கு அடித்தது ஜாக்பாட்..
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-பிப்-202014:13:24 IST Report Abuse
Rasheel வருவாய்துறையினரா?? திருடன்கிட்ட பொருளை பாதுகாக்க சொன்னா? இப்பவே உருக்கி கிராமுக்கு 4000 ரூபாய்க்கு வியாபாரம் ஆயிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X