சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சமூக ஆர்வலர் பீயுஷ் மானுஷ் கைது : வேலூர் சிறையிலடைப்பு

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
PiyushManush,arrest,activist,பியூஸ்மானுஷ்,கைது

சேலம் : வீட்டை அபகரிக்க முயன்று, பெண்ணை தாக்க முயன்ற, சமூக ஆர்வலர் பீயுஷ மானுஷ், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர், ஆஷாகுமாரி, 53; கணவனை இழந்தவர். சேலத்தில் மகள், மருமகனுடன் வசிக்கிறார். இவர், சேலம், கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தன் வீட்டை, சமூக ஆர்வலர் பீயுஷ், 49, அபகரிக்க முயன்றதோடு, தன்னை தாக்கியதாக, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் சேலம் கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.விசாரித்து நடவடிக்கை எடுக்க, சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு முதல்வர் உத்தரவிட்டார். கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்தனர். நேற்று மதியம், கொண்டப்ப நாயக்கன்பட்டி வீட்டுக்கு செல்ல, அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே வந்த பீயுஷை, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


அவர் மீது, பொது இடத்தில் ஆபாச வார்த்தையால் திட்டுதல், காயம் ஏற்படும்படி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்துள்ளனர்.முன்னதாக, பீயுஷ் தள்ளி விட்டதில், காயமடைந்த ஆஷாகுமாரி, நேற்று காலை, 11:00 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பீயுஷின் மனைவி மோனிகா, 42, கூறியதாவது:வீட்டுக்கு, 4 லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரித்து, குடியிருந்து வருகிறோம். வீட்டின் உரிமையாளருடன், குழந்தைகளின் படிப்பு முடியும் வரை, அதே வீட்டில் தான் இருப்போம் என, வாய்மொழி ஒப்பந்தம் போட்டுள்ளோம். திடீரென, சிலர் துண்டுதலின்படி புகார் கொடுத்துள்ளனர். தற்போது, குழந்தைகள் படித்து வருவதால், இரு ஆண்டுகளுக்கு பின் தான், வீட்டை காலி செய்வது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தொடரும் சர்ச்சைகள்


'சேலமே குரல் கொடு, சேலம் மக்கள் குழு' எனும் அமைப்புகளை ஏற்படுத்திய பீயுஷ், 2008ல் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். 2009ல், பிரதமராக இருந்த, மன்மோகன் சிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்தாக, இவரது ஜீப், வீடுகளை, காங்கிரசார் அடித்து நொறுக்கினர்.கடந்த, 2010 குடியரசு தினத்தில், அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரம் குறித்து அவதுாறு பரப்பியதாக, கைது செய்யப்பட்டார்.

2014ல், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக, குழந்தைகளை, கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்து, சர்ச்சையை ஏற்படுத்தினார்.சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். சேலம் - ஓமலுார் சாலையில், தனியார் ஜவுளி நிறுவனம் மரம் வெட்டியதற்கு, இவர், 7 லட்சம் ரூபாய் பெற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இவர் மீது, 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மார்-202003:27:27 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை சமூக ஆர்வலர்ன்னா என்னன்னே ?
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
29-பிப்-202023:55:00 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பஞ்சமி நிலத்தை ஆட்டயப்போட்டா தப்பில்லை...ஒரு வீட்டை ஆக்கிரமிக்க நினைப்பது தப்பா? என்னாய்யா அநியாயமா கீது...?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
29-பிப்-202001:32:21 IST Report Abuse
Rajesh vai moli oppanthamna, pomma poyi kali seyyunga veeda mudhalla......
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
29-பிப்-202009:18:10 IST Report Abuse
Pannadai Pandianபுருஷன் மாதிரி பொண்டாட்டியும் கேடி…....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X