அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதமும், ஜாதியும் இருபக்கமும் கூர்மையான கத்தி: ஸ்டாலின்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 26, 2020 | கருத்துகள் (39+ 77)
Share
Advertisement
CAA,MKStalin,DMK,Stalin,குடியுரிமைபாதுகாப்புமாநாடு, மதம், ஜாதி, இருபக்கம், கூர்மையான,கத்தி, ஸ்டாலின்,கொந்தளிப்பு,ஹிந்து

சென்னை : ''மதமும், ஜாதியும், இருபுறம் கூர்மையான கத்தி; அது, கையில் எடுப்பவரையே பதம் பார்த்து விடும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், குடியுரிமை பாதுகாப்பு மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன் தலைமை வகித்தார்.


கொந்தளிப்பு


கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: இந்தியர்களை, மதத்தின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம்; எந்த கடவுளையும் வழிபடலாம்; எந்த கோவிலுக்கும் போகலாம்; எந்த உணவும் சாப்பிடலாம். இதில், தங்களின் வன்மம், சர்வதிகாரத்தை யாரும் திணிக்கக் கூடாது. மனித மனங்களை பிளவுபடுத்தக் கூடாது.குடியுரிமையை பாதுகாக்க, நாடு முழுவதும், போராட்ட களமாகியுள்ளது. கலவரத்தை அடக்க மத்திய அரசுக்கு மனமில்லை என, தோன்றுகிறது.

இரண்டு மாதங்களாக, நாடே கொந்தளிப்பில் உள்ளது. பல்வேறு கொள்கைகளை கொண்ட காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒன்றாக இணைந்திருப்பதற்கு, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே காரணம்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை,
ஹிந்துக்களுக்கு எதிரானவர்களாக, சித்தரிக்க சிலர் முயல்கின்றனர்.

ஹிந்துத்துவத்தை எதிர்க்கிறோமே தவிர, ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேட்டால், முஸ்லிகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியர்களும் பாதிக்கப்படுவர்.தந்தை, தாயாரின் பிறந்த இடம் போன்ற ஆவணங்களை எல்லோராலும் தர முடியாது.தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திரும்ப பெறும் வகையில், சட்டசபையில் உடனே, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்கள் ஜெயிலுக்கு போகாமல், தங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான், இவற்றை ஆதரிக்கின்றனர். வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக, மக்களை பலிகடாவாக்கி வருகின்றனர்.மதமும், ஜாதியும், இருபுறமும் கூர்மையான கத்தி. அது, கையில் எடுப்பவரையே பதம் பார்த்து விடும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். இந்தியாவின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ, பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


பிரிக்க முடியாதுகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:குடியுரிமை திருத்தச் சட்டம், ராஜ்யசபாவில் நிறைவேற, அ.தி.மு.க.,வின் ஆதரவே காரணம். இதனால், நாடே போர்க்களமாகியுள்ளது. சட்டசபையின் அதிகாரத்தை பறிக்க, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் இல்லை.

புதுச்சேரி சட்டசபையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றினோம். மத ஒற்றுமையை பாதுகாக்க, ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம்.குடியுரிமை திருத்த சட்டத்தை அனைவரும் எதிர்க்கும்போது, 'அதனால் என்ன பாதிப்பு' என, முதல்வர் இ.பி.எஸ்., கேட்கிறார். தமிழக மக்களை, மத அடிப்படையில் பிரிக்க முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

மாநாட்டில், தமிழக காங்., ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, பாலபிரஜாபதி அடிகளார் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (39+ 77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TEXMART Slm -  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-202020:54:46 IST Report Abuse
TEXMART Slm ithu than saathan vetham othrathu enbatha
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
27-பிப்-202019:06:02 IST Report Abuse
Jayvee தம்பி சுடலை, மதம் ஜாதி என்ற இருபக்க கத்தியை வைத்து மக்களை கொல்வது கன்னட ராமசாமி தொடங்கி உன் காலம் வரை செய்து வருவது, திராவிட கட்சிகள் தான் .. ஒருபுறம் கிருத்துவர்கள், மறுபுறம் இஸ்லாமியர்கள் என்ற கத்தியை வைத்து ஹிந்துக்களை கொல்ல துடிப்பது நீதான்.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
27-பிப்-202018:58:41 IST Report Abuse
sankar ஜாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவதே திமுக வழக்கம் - இதில் பேச்சு மட்டும் பெருசா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X