சிறுபான்மையினர் மீது தாக்குதல் கூடாது: பாகிஸ்தானியர்களுக்கு இம்ரான் எச்சரிக்கை

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
ImranKhan,Pakistan,warning,Pakistanis,violence,Delhiriots,இந்தியா,முஸ்லிம்கள்,இம்ரான்,பாக், பிரதமர்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது, யாராவது குறி வைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது குறித்து, ஐ.நா.,வில் அனைத்து நாடுகள் பங்கேற்ற பொது சபை கூட்டத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், புலம்பினார். இதில், உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என, இம்ரான் கூறிவந்த நிலையில், ' இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை' என, மத்திய அரசு பதில் அளித்தது.

இந்நிலையில், டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற கலவரத்தில், 27 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news



இதையடுத்து, இம்ரான் கான், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது, யாராவது குறி வைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கிறேன்.

இங்கு வசிக்கும் சிறுபான்மையினர் அனைவரும், இந்நாட்டின் குடிமக்கள்தான். இந்தியாவில் வசிக்கும், 20 கோடி முஸ்லிம்கள் மீது தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202001:11:24 IST Report Abuse
Moorthy Ramachandran இப்படி கத்தி கத்தியே சாக பொரே...
Rate this:
Share this comment
Cancel
A B - Rameshwaram,இந்தியா
28-பிப்-202000:55:55 IST Report Abuse
A B இவர் சொல்வது சரியல்ல. ஒரு நாட்டில் இசுலாமியர் பெரும்பான்மை என்றால், மற்ற மதங்களை அனுமதிக்க தேவையில்லை. எளிதில் அவற்றை தடை செய்யலாம்.
Rate this:
Share this comment
veera - Chennai,இந்தியா
28-பிப்-202008:07:28 IST Report Abuse
veera அப்படியானால் இந்தியாவில் பெரும்பான்மை தவிர மற்ற மதங்களை தடை செய்யலாம்...
Rate this:
Share this comment
A B - Rameshwaram,இந்தியா
28-பிப்-202018:35:14 IST Report Abuse
A Bஇந்திய கடவுளின் தூதர் அறிவுரை படி நடக்கும் நாடு அல்ல. எனவே இந்தியாவிற்கு அது பொருந்தாது. இசுலாமிய நாட்டில் மட்டுமே அது சாத்தியம்...
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-பிப்-202022:00:45 IST Report Abuse
 nicolethomsonlசெக்யூலரிசத்துக்கு வந்த கேடு என்றால் அது மதம் சார்ந்த நாடுகள் தான் , குருட்டாம் போக்கு சட்டங்கள்...
Rate this:
Share this comment
Cancel
vijay vijay -  ( Posted via: Dinamalar Android App )
28-பிப்-202000:32:26 IST Report Abuse
vijay vijay .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X