பிஜு ஜனதா தளம் தலைவராக மீண்டும் நவீன் பட்நாயக்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புவனேஸ்வர்: ஒடிசாவில், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவராக, மாநில முதல்வர் நவீன் பட்நாயக்,73, தொடர்ந்து, எட்டாவது முறையாக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



latest tamil news



ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில், நேற்று நடந்த கட்சி தலைவர் பதவிக்கு, நவீன் பட்நாயக் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரி பி.கே.தேவ் அறிவித்தார்.


latest tamil news



கட்சி துவங்கிய, 1997ம் ஆண்டு முதல், தலைவராக பதவி வகித்து வரும் நவீன் பட்நாயக், தற்போது எட்டாவது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வாகி உள்ளார். ஒடிசாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அவர் முதல்வராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-பிப்-202011:39:53 IST Report Abuse
இந்தியன் kumar மக்களின் ஆதரவு இருந்து தொடர்ந்து தலைவராக இருக்கலாம்.
Rate this:
Cancel
27-பிப்-202010:37:18 IST Report Abuse
chandran கட்டுமரத்திற்கே போட்டியா
Rate this:
Cancel
27-பிப்-202008:59:30 IST Report Abuse
kulandhai Kannan வாழ்க ஜனநாயகம் !!!?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X