பொது செய்தி

தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
dmk,mla, kppsamy, samy, passesaway, திமுக, எம்எல்ஏ, கேபிபிசாமி, சாமி

இந்த செய்தியை கேட்க

சென்னை: மீன்வளத்துறை முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான, கே.பி.பி.சாமி, 57, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி. ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மூன்று நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். நேற்று காலை, 6:10 மணிக்கு, திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள, தன் இல்லத்தில் உயிரிழந்தார்.இவர், 2006 பொதுத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, முதல் முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார். சாமியின் மனைவி உமாசாமி, மகன் இனியவன் இருவரும், ஏற்கனவே, மரணமடைந்து விட்டனர். மற்றொரு மகனான பரசு பிரபாகரனும், மகள் உதயாவும் உள்ளனர். இவர்களில், மகள் உதயா ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், அவர் வந்த பின், இன்று மாலை, 3:00 மணிக்கு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.


latest tamil news

ஸ்டாலின் அஞ்சலிகே.பி.பி.சாமி உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர், கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு, எம்.பி.,க்கள் கலாநிதி, தமிழச்சி தங்க பாண்டியன், மாவட்ட செயலர்கள் சுதர்சனம், சேகர்பாபு, நாசர் உட்பட ஏராளமான தி.மு.க., வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின், ஸ்டாலின் கூறுகையில், ''கே.பி.பி.சாமியின் மறைவு, தி.மு.க.,விற்கும், மீனவ சமுதாயத்திற்கும் பேரிழப்பு. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நேரில் சென்று பார்த்தேன். இயக்க பாடலை பாடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்,'' என்றார்.

பின், ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தி.மு.க., வின் சுறுசுறுப்பு தொண்டராக செயல்பட்டவர் கே.பி.பி.சாமி. சட்டசபையில், அவர் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் மறக்க இயலாது' எனக் கூறியுள்ளார். கே.பி.பி.சாமியின் மறைவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை சரிவுதமிழக சட்டசபையில், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 99 ஆக குறைந்துள்ளது.தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 125 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.,விற்கு, 100 எம்.எல்.ஏ.,க்கள், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., உள்ளார்.சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால், நேற்று காலை இறந்தார். இதன் காரணமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 99 ஆக குறைந்துள்ளது.தற்போது, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ளது. காலியான இடத்திற்கு, ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால், திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-பிப்-202004:42:03 IST Report Abuse
Bhaskaran Aayutha பூஜை அல்லது தீபாவளி செலவுக்கு ஒற்றியூர் காரர்களுக்கு பணம் கிடைத்துவிடும்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
27-பிப்-202014:55:49 IST Report Abuse
periasamy RIP
Rate this:
Cancel
27-பிப்-202013:51:05 IST Report Abuse
நக்கல் மொதல்ல திருவற்றியூர் பக்கம் ஒரு சின்ன வீடா பாரத்து ஏற்பாடு பண்ணணும்... தேர்தல் போது பணம் கொட்டும்...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-பிப்-202015:11:21 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உங்கள் தலைவர் சின்ன வெற்றிக்கு என்ன ஆயிற்று தெரியும் இல்ல...
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
28-பிப்-202013:48:59 IST Report Abuse
மூல பத்திரம் ஏன் இந்த போலி இமிடேஷன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X