பொது செய்தி

இந்தியா

டில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
Muralidhar, judgemuralidhar, Judge, Delhi,violence,  transfer, Punjab & Haryana, HC, டில்லி, வன்முறை, கலவரம், உயர்நீதிமன்றம், நீதிபதி, இடமாற்றம், முரளிதர், நீதிபதிமுரளிதர்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி வன்முறை வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை வழங்கியிருந்தது.

டில்லி வன்முறை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் பா.ஜ.,வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மிகவும் ஆட்சேபகரமான முறையில் பேசியுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்து, வழக்கை டில்லி போலீஸ் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு, போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் டில்லி உயர்நீதிமன்றத்தின் 3வது மூத்த நீதிபதியான முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ''இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு வழங்கிய அதிகாரத்தின்படி, ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை, பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தும், அங்கு பொறுப்பேற்று கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.'' இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அவர் எப்போது பொறுப்பேற்பார் என்பது அறிவிக்கப்படவில்லை.


latest tamil newsகடந்த பிப்.,12 அன்று, நீதிபதி முரளிதரை, பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இதற்கு டில்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து, அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
27-பிப்-202013:26:21 IST Report Abuse
Anand டிஸ்மிஸ் செய்வதை விட்டு விட்டு எதற்கு இடமாற்றம்? சில சமயம் இப்படிப்பட்ட நபர்களின் அரவணைப்பால் தான் அந்நிய கைக்கூலிகள் மிக தைரியமாக இந்தியாவின் மீது வெளிப்படையாகவே விஷத்தை கக்குகிறார்கள். உதாரணத்திற்கு ஷாஹீன் பாக் போராட்டம்.
Rate this:
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
27-பிப்-202014:03:31 IST Report Abuse
Raja Narasiman Vivekகுண்டர் படை தலைவன் அமித் பாதுஷா கேசு இல்லாமல் பண்ணியதற்குத்தானே கேரளா கவர்னர் பதவி கொடுத்தவன்தானே உன்கூட்டம் இப்போ எதற்கு பொங்குதிய...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-பிப்-202013:15:52 IST Report Abuse
Darmavan பார்ப்பதற்கு இளவயது போல் தெரிகிறது. அதற்குள் ஜட்ஜ் போஸ்ட்.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
27-பிப்-202013:08:38 IST Report Abuse
Narayanan Muthu தவறுகளை சுட்டி காட்டும் நீதிபதிகளை பழி வாங்குவதும் பிஜேபி யின் கொடுமைகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தால் பதவிகள் வாரி வழங்குவதும் தான் இந்த பாஜக அரசின் கொள்கை. சமீபகால தீர்ப்புகளை ஆராய்ந்து பார்த்தாலே நீதிபதிகளின் நேர்மை என்னவென்று தெரியும். நல்ல வேலை இவருக்கு மறைந்த நீதிபதி லோயா வுக்கு கொடுத்த வெகுமதி கொடுக்காமல் இட மாறுதலோடு நிறுத்தி விட்டார்கள் நியாயவாதிகள். வெட்கப்படவேண்டிய அரசு பரிபாலனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X