பொது செய்தி

இந்தியா

டில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்துக்கள்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (93)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, இந்துக்கள் தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.latest tamil news


வடகிழக்கு டில்லியில் சிஏஏ.,வுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. தொடர்ந்து 3 நாட்களாக தொடர்ந்த வன்முறையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தின் போது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ள இந்துக்கள் தங்களின் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து வருகின்னறர்.


latest tamil newsகலவரத்தை நேரில் பார்த்த இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில், பிப்.,25 அன்று பகல் 1 மணியளவில் சுமார் 1000 பேர் எங்கள் பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதால் நாங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். அவர்கள் எங்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இங்கு நாங்கள் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் இந்துக்களுடன் சிறு பிரச்னை கூட ஏற்பட்டதில்லை. இப்போதும் வீடுகளை, உடைமைகளை இழந்த எங்களை அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்கின்றனர் என்றார்.

கலவரக்காரர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அவர்கள் யார் என தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கலவரத்தின் போது நாங்கள் ஆதரவின்றி நின்றோம். பலமுறை போலீசுக்கு போன் செய்தும் அவர்கள் தாமதமாகவே வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj - salem,இந்தியா
01-மார்-202016:48:51 IST Report Abuse
raj டெல்லியில் முசுலிம்கள் போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஹிந்துக்கள் அடைக்கலம் கொடுப்பது காலம் காலமாக இந்தியாவில் நடைபெறுகிறது.மதத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கு வெளி நாடுகளில் இருந்து வரும் நிதியினை அவர்களுக்கு கொடுப்பார்கள் . ஆனால் ஹிந்துக்களுக்கு எந்த வொரு உதவியையும் எந்த கட்சியும் செய்வதில்லை .ஆனால் ஓட்டுக்களை பெற எல்லா கட்சிகளும் மதத்தின் பெயரால் மக்களை பிரிவினை ஏற்படுத்தி தங்களின் சுய லாபத்திற்காக பலன் அடைகிறார்கள் .எனவே இனி ஒன்று பட்ட இந்தியாவினை காண மதத்தின் பெயரால் ஓட்டுக்களை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
28-பிப்-202010:41:17 IST Report Abuse
spr பயங்கரவாதிகளும் அரசியல்வியாதிகளும் இருவருமே தங்கள் சொந்த பகையினை தீர்த்துக் கொள்ள சாமான்ய பொதுமக்களையே தாக்குகிறார்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல என்றறிந்த பொறுப்புள்ள தலைவர்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசவோ எழுதவோ மாட்டார்கள். இந்தப் பிரச்சினை எல்லாமே காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டவையே அன்று இதற்கு ஆதரவாக பேசிய சிதம்பரம் உட்பட அனைத்துத் தலைவர்களுமே இந்த போராட்டக்காரர்களால் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் அப்படியில்லை என்பதால் இது முழுக்க முழுக்க காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் மோடி என்றொரு தனி மனிதரை தேர்தல் மூலம் எதிர்க்க இயலாமல் அவரை மட்டுமே குறிவைத்து, மக்களின் ஒரு சாராரை தூண்டிவிட்டு அரசு இயங்கவிடாமல் தடுக்க முயலுகிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும் தேர்ந்தடுக்கப்பட்ட அரசையோ அமைச்சரையோ அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரியைக்கூட ஒரு ஆளுனராலோ அல்லது குடியாட்சித் தலைவராலோ பதவி நீக்கம் செய்ய இயலாது என்றறியாமல், makkaLaik kuzhappukiRaargaL
Rate this:
Share this comment
Cancel
SIVA G india - chennai,இந்தியா
27-பிப்-202023:40:45 IST Report Abuse
SIVA G  india முன் உதாரணங்கள் பலமுறை மதக்கலவரங்கள் நடந்து உயிர் பலியாகியுள்ளன.. இவையாவும் ஒரு நாளில் திடீரென வரவில்லை.ஓவ்வொரு நாளும் உஸ்ணம் ஆவது தெரிந்தே எல்லா மதத்தலைவர்களும் அமைதி படுத்தாது கண்டு கொள்ளாமல் விட்டதின் விழைவுகளே. இனி சர்வமத அமைதி பேரணி என தங்களை பெருமை படுத்திகொள்ள அமைதி ஊர்வலம் மட்டுமே செல்வார்கள். உயிர் பலியும், வலியும் பல ஆண்டுகள் அந்த குடும்பங்களுக்கு வடுவாக இருக்குமே. நீதித்துறை இனி அரசு,காவல்துறை அல்லாமல் வருங்காலங்களில் அரசியல் தலவர்களுக்கும்,ஆன்மீக தலைவர்களுக்கு முன்கூட்டியே அமைதி ஏற்படுத்த அறிவுருத்தும் என நம்பவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X