பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் அடுத்த 'பகீர்'

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
Seeman, Rajinkanth, Karnataka, NTK, Nithyananda, சீமான், ரஜினிகாந்த், கட்சி, கர்நாடகா, நித்தியானந்தா, ஆதரவு, தீவு, நாம் தமிழர் கட்சி, ஒருங்கிணைப்பாளர்

இந்த செய்தியை கேட்க

சென்னை: நடிகர் ரஜினி மீது அளப்பரிய மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு தந்து வாழ்த்தி பேசுவதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. ஆனாலும், அவரின் அரசியல் வருகை, பல வருடங்களாக ஆட்சியமைத்தவர்களையும், மற்ற கட்சியினரையும் விட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தான் அதிக பயம் வந்துள்ளது போல.

இதன் வெளிப்பாடாக தான் மேடைக்கு மேடை சம்பந்தமே இல்லாமல் ரஜினியின் பெயரை குறிப்பிட்டு, அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்து பேசிவந்தார். அதேபோல் சாமியார் நித்தியானந்தா மீதும் தனிப்பட்ட பொறாமை அவருக்கு இருந்து வந்ததையும் அவரே வெளிப்படுத்தினார்.


latest tamil news


நித்தியானந்தா போல சாமியார் ஆவேன் என்றும், அவரை போல தனித்தீவு வாங்கி நிம்மதியாக போகப்போகிறேன் எனவும் மேடையில் பேசினார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்றும் தமிழையும், தமிழர்கள் பற்றியும் முன்னிலைப்படுத்தி தமிழ் தேசியம் பற்றி பேசியும் வந்தார். இதனால், மராட்டியத்தை சேர்ந்த ரஜினி தமிழகத்தை ஆளவேண்டும் என நினைப்பதை நிறுத்த வேண்டும் என பேசினார். ஆனால், அவர் மட்டும், வெளிநாட்டு நிறுவனத்தின் உடை, வாகனத்தை பயன்படுத்துவது என மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவார்.


latest tamil news


அவரை நம்பியுள்ள அன்பு தம்பிகள் (தொண்டர்கள்) சீமான் என்ன சொன்னாலும் அது பொய்யா உண்மையா என்று கூட தெளிவில்லாமல் அவர்களை தாக்கி விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டனர். அவர்களின் தனிப்பட்ட விமர்சனத் தாக்குதல்களில் நடிகர் ரஜினியும், நடிகை விஜயலட்சுமியும் தான் அதிகம் சிக்கினர். அப்படி இருக்கையில் தற்போது ரஜினியை விமர்சித்து இழிவுபடுத்தி பதிவிட வேண்டாம் என தம்பிகளுக்கு அன்பு கட்டளை விடுத்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் தம்பிகளுக்கு தெரியவில்லை.


latest tamil news


கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து இணையதள பாசறை தம்பிகளிடம் சீமான் பேசியதாவது: நித்தியானந்தா போல 20 தீவுகளை வாங்கப்போகிறேன். ஒரு தீவு ரூ.10 கோடி என்கின்றனர். தம்பிகள் கட்சிக்கு நிதி வசூலிக்கும்போது, கறுப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் சிவாஜி படத்தில் ரஜினி பெறுவது போல, பணத்தை வசூலியுங்கள். நாமும் ரூ.200 கோடியில் 20 தீவுகளை வாங்கி, அங்கு தூய தமிழர்களை குடியமர்த்த போகிறேன். சிலர் தங்களுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுகின்றனர். அப்படி பேசுபவர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அடி இருக்கு.

ரஜினியை இழிவாக பதிவிடுவது தவறு. அரசியல், கொள்கைகள் மீது தான் எனக்கு அவரை பிடிக்காது. ஆனால், அவர் மீது அளப்பரிய மரியாதை வைத்துள்ளேன். கர்நாடகா அல்லது மராட்டியத்தில் கட்சி தொடங்கினால் ஆதரவு தந்து அவரை வாழ்த்தி பேச தயாராக இருக்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
27-பிப்-202020:42:12 IST Report Abuse
SaiBaba விஜயலட்சுமியை தாண்டி தமிழகத்துல இனி அரசியல் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாரோ என்னவோ
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
27-பிப்-202020:41:09 IST Report Abuse
SaiBaba லைம் லைட்டுல இருக்கணும்னு நினைக்கிறார் போல
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-பிப்-202020:25:42 IST Report Abuse
Rajagopal தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இவனுக்கு ஏராளமாகப் பணம் கொடுக்கின்றன. இவனும், இவன் கட்சிக்காரர்களும் இஸ்லாமியர்களுக்கு எப்படி அடி வருடுகிறார்கள் என்பதை அனைவரும் அவரகளது மேடைப் பேச்சுகளில் காணலாம். ரஜனி ஆட்சிக்கு வருவாரா, மாட்டாரா என்று தெரியாது. ஆனால் இவனது கட்சிக்காரர்களும், திராவிடக் கட்சிகளும், வயிற்றில் புளியை கரைத்தது போல ஓலமிடுகிறார்கள். ரஜனி பாஜகவின் ஆள் என்ற எண்ணம் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கிறது. அதனால் அவர்களது ஏஜெண்டுகளை இப்பொழுதே கிளப்பி விட்டிருக்கிறார்கள். ரஜனி வேறு CAA வுக்கு ஆதரவாகப் பேசி விட்டார். அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X