"திமுக காப்பான்" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

பாட்னா : திமுக காப்பான், அரசியல் சாணக்கியர் பிரஷாந்த் கிஷோர் பாண்டே, பீகார் பிரசாரத்தின் போது தனது வார்த்தைகளை திருடி விட்டதாக ஷாஸ்வந்த் கவுதம் என்பவர் அளித்த புகாரின் பேரில் மோசடி மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



latest tamil news


ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பலம் வாய்ந்த தலைவராக கருதப்பட்ட திமுக காப்பான் பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கினார். இதன் பிறகு, பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள ஆம்ஆத்மி, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சித்து வந்தன. தற்போது திமுகவை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதனாலேயே அவர் திமுக காப்பான் என்றும் அரசியல் சாணக்கியன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்காக பீகார் முழுவதும் 100 நாட்கள் பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டார் பிரஷாந்த் கிஷோர் பாண்டே. நாட்டில் உள்ள 10 சிறந்த மாநிலங்களில் பீகாரை இடம்பெற செய்வதாக கூறிய பிரஷாந்த் கிஷோர் பாண்டே, அதற்காக "பாத் பீகார் கி" (Baat bihar ki) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். பீகாரில் சிறந்த இளம் தலைவர்களை உருவாக்கப் போவதாகவும் கூறி இருந்தார்.


latest tamil news



இதுவரை நிதிஷ்குமார் கட்சிக்காக பிரசாரம் செய்து வந்த பிரஷாந்த் கிஷோர் பாண்டே, தற்போது நிதிஷ்குமாரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நிதிஷ்குமார் பல காலமாக பீகாரை ஆட்சி செய்தும் தொடர்ந்து பீகார் ஏழை மாநிலமாகவே இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ஷாஸ்வந்த் கவுதம் என்ற இளைஞர், தான் ஓசாமா என்ற நபருடன் இணைந்து உருவாக்கிய "பீகார் கி பாத்" (Bihar ki Baat) என்ற வார்த்தையை பிரஷாந்த் கிஷோர் திருடகி விட்டதாக பாட்னாவின் பாடலிபுத்திரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பிரஷாந்த் கிஷோர் பாண்டே மீது சட்டப்பிரிவு 420 கீழ், 406 (மோசடி மற்றும் கிரிமினல் குற்றத்திற்கு சமமான நம்பிக்கை மோசம்) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-பிப்-202009:11:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவ்ளோதான் இனி திமுக கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தகோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
28-பிப்-202010:21:40 IST Report Abuse
Gopi பாண்டே , தேஷ்பாண்டே , பிராமண பெயராட்டம் தெரியுது இவர்களுக்கும் போலி தமிழ் த்ராவிடம் பேசும் தெலுகு திமுகவுக்கும் என்ன சம்பந்தம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-பிப்-202021:13:23 IST Report Abuse
Natarajan Ramanathan rajkumar.......தக்ஷிணாமூர்த்தி யார் என்று சுடலைக்கே தெரியாதேப்பா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X