ஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் 'மர்டர்'

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Rs5, Mumbai, AutoDriver, Killed, Gas Station, மும்பை, கேஸ், ஆட்டோ டிரைவர், மோதல், கொலை 5 ரூபாய்

இந்த செய்தியை கேட்க

மும்பை: ஆட்டோவிற்கு கேஸ் நிரப்ப சென்றவருக்கு ரூ.5 மீதி கொடுக்காமல் ஊழியர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் பொரிவாலி பகுதியில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையத்தில் ராம்துலார் சர்ஜூ யாதவ் (வயது 68) என்பவர் தனது ஆட்டோவிற்கு கேஸ் நிரப்ப சென்றுள்ளார். ரூ.205 க்கு கேஸ் நிரப்பியப்பின் தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட ஊழியர், 5 ரூபாய் குறைவாக ரூ.290 மட்டும் கொடுத்துள்ளார். மீதி பணம் குறைவாக இருப்பதாக ராம்துலார் கேட்டதற்கு தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் அவர் தனது மகன் சந்தோஷ் யாதவிற்கு போன் செய்து அழைத்துள்ளார்.


latest tamil news


அங்கு வந்த சந்தோஷ், ரூ.5ஐ தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு, ஊழியர்கள் ராம்துலாரை தாக்கியதில், மயக்கமடைந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சந்தோஷ் புகார் அளித்ததில், கேஸ் நிரப்பும் நிலையத்தின் 5 பேரையும் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-பிப்-202020:42:28 IST Report Abuse
Vena Suna அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும்...ஒரு மாசத்துல கொடுக்கணும்
Rate this:
Share this comment
Cancel
27-பிப்-202017:18:54 IST Report Abuse
ஆப்பு ரெண்டு பார்ட்டிகளும் கூமுட்டைகள். 5 ரூவாய்க்கு இவர் பெட்ரோல் அடித்துக் கொள்ள முடியாதா? இவுரு உயிர்போச்சு... அவிங்க வாழ்க்ஜை போச்சு.
Rate this:
Share this comment
Cancel
manmadhan - kargil,இந்தியா
27-பிப்-202016:49:19 IST Report Abuse
manmadhan 5 ரூபாயை விட்டுக்கொடுக்கும் மனமும் இல்லை 5 ரூபாயை ஏமாற்றக் கூடாது என்ற மனமும் இல்லை அடுத்த முறை சரி செய்து கொள்ளலாம் என்றால் முடிந்து போயிருக்கும்..சண்டை போட நேரத்தில் பல 5 ரூபாய்களை சம்பாதித்து இருக்கலாம் பொறுமை காணாமல் போனது ஏனோ ? எல்லா வேலை நாளிலும் ரிசர்வ் வங்கி சில்லறை வழங்கி வருகிறது பலரும் சில்லறை பெற்று வருகிறார்கள்...
Rate this:
Share this comment
Umashankar - Salem,இந்தியா
27-பிப்-202017:17:04 IST Report Abuse
Umashankarநண்பரே, இங்கு பிரச்சினை 5 ரூபாயை பற்றியது மட்டுமல்ல. எந்த சூழ்நிலையில் ஒருவர் கோவப்படுகிறார், அந்த நேரத்தில் அவர் உபயோகிக்கும் வார்த்தைகள் என்னென்ன. பெட்ரோல் பங்க் ஊழியர் 5 ரூபாய் தர வேண்டியது அவரின் கடமை. அதை அவர் தர மறுத்து முறையற்ற வார்த்தைகளால் திட்டும் போது நம்மில் எல்லோருக்குமே கோபம் வந்துவிடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X