அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
T20WorldCup, INDvsNZ, INDWvNZW, Twenty20, Worldcup, SemiFinal, Qualify, டுவென்டி20, டி20, உலககோப்பை, பெண்கள், இந்தியா, வெற்றி, அரையிறுதி, தகுதி

மெல்போர்ன்: 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியப் பெண்கள் அணி முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.


latest tamil news



ஷபாலி நம்பிக்கை

இந்திய அணிக்கு மந்தனா (11) ஏமாற்றினார். ரோஸ்மேரி பந்துவீச்சில் தனியா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (10) அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் (1), வேதா (6) ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். ஷபாலி வர்மா (46) நம்பிக்கை அளித்தார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே (10) அவுட்டாகாமல் இருந்தார்.


latest tamil news



ஷிகா அசத்தல்



நியூசிலாந்து அணிக்கு ராகெல் (12), கேப்டன் சோபி டிவைன் (14) ஏமாற்றினர். சுஜீ பேட்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ராதா யாதவ் 'சுழலில்' கேட்டி (25) அவுட்டானார். அமெலியா கெர் பவுண்டரியாக விளாசி நெருக்கடி தந்தார். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் (11) ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 'ஏ' பிரிவில் மூன்று போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambantham sasikumar - chennai,இந்தியா
27-பிப்-202016:20:25 IST Report Abuse
sambantham sasikumar வெற்றிபெற வாழ்த்துக்கள், இந்தியர்கள் கண்ணியமானவர்கள், உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று உலகிற்கு எடுத்துக்காட்டுங்கல்
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
27-பிப்-202014:27:20 IST Report Abuse
swega நல்ல போட்டி. 18 ஆவது ஓவர் வரை இந்தியா எளிதாக வெற்றிபெறுமென நினைத்தோம். 19 ஆவது ஓவர் நியூஸிலாந்து பக்கம் சாய்ந்தது. 20 வைத்து ஓவரில் நாம் வெற்றிபெற்றோம். வாழ்த்துக்கள் சகோதரிகளே
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
27-பிப்-202013:42:36 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் நமது சகோதரிகளுக்கு. உங்கள் வெற்றி தொடரட்டும். கோப்பை யோடு நாடு திரும்ப மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X