பா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்.,

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

புதுடில்லி : டில்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளீதர், இரவோடு இரவாக மாற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்., இது பா.ஜ.,வின் அதிகார உச்சத்தையே காட்டுகிறது என தெரிவித்துள்ளது.latest tamil news


டில்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி முரளீதரை, பணியிட மாற்றம் செய்து, நேற்று இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பா.ஜ., தலைவர்கள் மீது வழக்கு தொடராதது ஏன் எனவும், டில்லி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்தும் கடுமையாக கருத்து கூறி இருந்தார்.

இவர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மோடி- அமித்ஷா தலைமையிலான அரசில் அதிகார திமிர் மற்றும் அதிகார போக்கு தான் உள்ளது. நாட்டில் எங்கு நீதி இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு, அதிகார உச்சத்தில் நீதித்துறையை குழப்பி வருகிறது.


latest tamil newsநீதிபதி முரளீதர் இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளார். இதனால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதிகார திமிர் மிக்க மோடி, அமித்ஷா அரசு வெறுப்புணர்வு பேச்சுக்களில் சாதனை படைப்பதை பாதுகாக்க நினைப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. பா.ஜ., அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கையே இது காட்டுகிறது. நீதித்துறைக்கு எதிராக மிரட்டல் மற்றும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டுள்ளது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-மார்-202017:25:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni கரப்ஷன் இல்லாத ஆட்ச்சியேதான் பிஜேபி என்பது உண்மைதானே ஐய்யா நாடுநாசமாபோகணும் னு எண்ணுறவங்களேதான் திமுக கான் கிரேஸ் போன்ற பணம் பண்ணும் காட்ச்சிக்கால் நாப்பதேழுலந்து முப்பாட்ட டு ராஜீஎவ் வரை எல்லா மந்திரிகளும் பிராடுகளேதான் உடனே அதிமுக தங்கள் சுத்தம் என்று எண்ணவேண்டாமுங்கோ அதுகள் மலைமுழுங்கி ஏப்பம் விடுறாங்க என்பதும் நாம் அரிஞ்சதுதான் இவனுக சேர்த்தசொத்துக்கள் எவ்ளோ சாமி மக்கள் க்கு என்னையா கிடைச்சுது ????????????நாட்டுக்கு நல்லது செய்தவா ரொம்பவே கம்மிதான் காமராசர் ஐயா க்கக்கன் ஐயா போன்றவாளையும் பார்த்திருக்கோம் இன்று அரசியவியாதிகளா இருக்கும் நபர்களை பார்த்தாலே பயமாயிருக்கு சினிமாலேவற ரௌடிகள் போல இருக்குங்க
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
27-பிப்-202022:41:42 IST Report Abuse
unmaitamil இந்திராவும் காண் கிராஸும் செய்யாத நீதிமன்ற திருவிளையாடல்களா ?? தான் சொன்னதுபோல் நீதி வரவில்லை என்பதற்காக நீதிபதியை மாற்றினார். சட்டத்தை மாற்றினார். அவசரகாலத்தை அறிவித்தார். , ,
Rate this:
Vinay - Toronto,கனடா
28-பிப்-202001:41:25 IST Report Abuse
Vinayஅப்ப இவங்க செய்யறது சரின்னு சொல்ல வரிங்களா......
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
27-பிப்-202021:43:02 IST Report Abuse
Suri Justice not only should be done but seen to be done.... Unfortunately this did not happen hear. Most unfortunate. This despite the Delhi Bar Counsel showing its protest. All our Institutions are taking a big hit under this regime. All the Institutions are crumbling under this regime. Most pathetic to notice is the buckling of Supreme Court. Looks like in the guise of national interest, this regime is arms twisting the apex judiciary too. This regime is dangerously tiptoeing the foot steps of Nazis.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X