அமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த காங்.,

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்., சார்பில் பேரணியாக சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது.



latest tamil news



டில்லியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டத்தின் போது வெடித்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜினாமா செய்ய வேண்டும் என காங்., இடைக்கால தலைவர் சோனியா நேற்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று சோனியா தலைமையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சுர்ஜிவாலா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்., தலைவர்கள் பேரணியாக சென்று, ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், தனது கடமையை சரியாக செய்யாத உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத்திய மற்றும் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுகள் அலட்சியமாக இருந்ததே 32 பேர் உயிரிழக்க காரணம் எனவும் கூறப்பட்டிருந்தது.


latest tamil news



ஜனாதிபதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராஜதர்மத்தை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார். பிறகு பேசிய சோனியா, மத்திய அரசும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி அரசும் வன்முறையின் போது அமைதி காத்துள்ளன என்றார்.


latest tamil news



காங்., தனது மனுவில், இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் நீங்கள், மனசாட்சிப்படி இந்த அரசின் பாதுகாவலனாக இருந்து அரசியலமைப்பு கடமைகளையும், ராஜதர்ம தூண்களையும் பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் உயிர், சுதந்திரம், சொத்துக்களை பாதுகாக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அவரது திறமையின்மையே இந்த சூழலுக்கு காரணம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-மார்-202017:31:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni நேர்மைக்கும் இந்த க்ரூப்புக்கும் சம்பந்தமே இல்லீங்களே அதான் தவிக்குறாங்க , பிடிச்சு திஹாரிலே போடனும் மாணமோஹான் சிங் இன்னமும் இந்த சோனியா பின்னாலேயே ஓடுறாங்களே எவ்ளோகேவலம் படிப்பே இல்லாத சோனியா உச்சிமுதல் பாதம்வரை ஓலைகளே தான் இந்தபேக்கு ஆவாகிட்டமாட்டின்னு ம்முலிக்குது இதுலே பொருளாதாராமலே Dr பட்டம்வேறு கண்ராவி
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-பிப்-202009:16:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni இப்போது நமதுதேசத்துக்கே வில்லி. இவளாலமதம்மாறிய எல்லோரும் மீண்டும் இந்துக்களாவே ஆவானுக அபிகாஸ் இந்துமதம்தான் புதுசாமதம்மாறிய கிறிஸ்தியங்களுக்கு தாயமதம் மறக்காதீங்க இந்தியாலே எவனும் தூய முஸ்லிமோ கிறிஸ்துவனோ இல்லீங்க மாற்றப்படடவனுகளேதான் சமீபமா மாறியவைகள் எல்லாம் தீவிரவாதிகளாவே ஆக்கப்பாட்டிண்டுருக்கானுக
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-பிப்-202004:15:10 IST Report Abuse
Cheran Perumal நடவடிக்கை எடுத்து இரண்டுபேர் செத்திருந்தால் அந்த பொணத்தை டிரம்பின் முன்பு போட்டு ஒப்பாரி வைத்திருப்பார்கள். அது நடக்காமல் செய்துவிட்டார் என்ற வன்மம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X