பொது செய்தி

இந்தியா

அமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா பதிலடி

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

புதுடில்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையின் போது டில்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக டிரம்ப் கூறிய பதில், தலைமையின் தோல்வியையே காட்டுகிறது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) கூறிய கருத்திற்கு இந்திய அரசு சார்பிலும், பா.ஜ., சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.



latest tamil news




அதிபர் வேட்பாளர் குசும்பு :


டில்லி கலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேட்டதற்கு, "அது தனிநபர் தாக்குதல். நான் அது பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் மோடியிடம் அது பற்றி பேசவில்லை. அது இந்தியா சார்ந்தது" என்றார். டிரம்ப்பின் இந்த பதில் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders), " 200 மில்லினுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவை தங்களின் வீடு என்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது பற்றி பேசிய டிரம்ப், இது இந்தியா சார்ந்தது என்கிறார். மனித உரிமையில் தலைமையின் தோல்வியையே இது காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதே போல் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் உள்ளிட்ட சிலரும் டில்லி கலவரம் தொடர்பாக கருத்து கூறி இருந்தனர்.


latest tamil news



இந்தியா பதிலடி :


இவற்றிற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், மதசுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் , சில மீடியாக்கள் மற்றும் சில தனிநபர்கள் டில்லியில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்தது எங்களுக்கு தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும், உண்மைக்கு மாறானது. தவறாக வழி நடத்தக்கூடியதுடன், இந்த விவகாரத்தை அரசியலாக்க நடக்கும் முயற்சி. வன்முறையை தடுக்கவும், சகஜ நிலையை கொண்டு வருவதை உறுதி செய்வதற்காக சட்ட அமைப்புகள் பாடுபட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகளில் அரசின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர். அமைதியை கொண்டு வரவும், சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முக்கியமான நேரத்தில், யாரும் தவறான கருத்தை தெரிவிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



பா.ஜ., மறைமுக எச்சரிக்கை :


பெர்னி சாண்டர்ஸ் டுவிட்டரில் பதிவிட்ட கருத்திற்கு பதிலளித்துள்ள பா.ஜ., பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், இந்த கருத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியாவை முக்கிய பங்களிக்க கட்டாயப்படுத்துவதை போல் உள்ளது. நாங்கள் எப்போதும் நடுநிலையுடனேயே இருக்க விரும்புகிறோம். ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்துகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-202018:16:18 IST Report Abuse
Ramesh R சரியாக சொல்லியிருக்கிறார் பென்னி
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
28-பிப்-202018:00:14 IST Report Abuse
Jaya Ram அய்யா அமெரிக்கர்களே முதலில் உங்கள் முதுகை பாருங்கள் ஈராக் அதிபர் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்று உலகுக்கு அறிவித்துவிட்டு அந்நாட்டின் மீது படியெடுத்து மனித உரிமை மீறல் களாக அந்நாட்டு மக்களையும் அந்த அதிபர் சதாம் உசேனையும் கொன்ற நீங்கள் எந்த ரசாயன ஆயுதத்தினை அவர்கள் வைத்திருந்தனர் என்று கண்டு பிடித்தீர்கள் ஒன்றும் இல்லை என்றீர்கள் பொய்யுரைத்ததற்காக அமெரிக்கா உலக மக்களிடமோ , அல்லது ஈராக் மக்களிடமோ மன்னிப்பு கேட்டீர்களா இல்லையே முதலில் அதனை செய்யுங்கள் பின்னர் மற்றவர்களை பற்றி பேசுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-பிப்-202016:42:19 IST Report Abuse
Sanny இவரு தப்பித்தவறி தேர்தலில் வெற்றி பெற்றால் நம்மாளு எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு முதலில் வாழ்த்து தெரிவிக்க போவாரு? அரசியல் சாக்கடை அதில் நீந்த முன் யோசிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X