கொரோனா பாதிப்பு: சீனாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (17) | |
Advertisement
வூஹான் : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்ஜென் (Shenzhen) நகரில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அரசுக்கு பரிந்துரைத்தனர். இதுனை ஏற்று அரசும் தடை விதித்துள்ளது.கொரோனா வைரசிற்கு சீனாவில் மட்டும் இதுவரை 2800 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 37 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசிற்கு ஏறக்குறைய ஒரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வூஹான் : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்ஜென் (Shenzhen) நகரில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அரசுக்கு பரிந்துரைத்தனர். இதுனை ஏற்று அரசும் தடை விதித்துள்ளது.latest tamil news


கொரோனா வைரசிற்கு சீனாவில் மட்டும் இதுவரை 2800 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 37 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசிற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் வூஹான் நகரில் வவ்வால், பாம்பு, பூனை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வூஹானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சிகள் விற்பனைக்கும், அவற்றை உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம், சீன அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.


latest tamil news


தற்போது சீனாவில் பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, முயல், மீன், கடல்உணவுகள் உள்ளிட்ட 9 இறைச்சி வகைகள் மட்டுமே உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நாய் மற்றும் பூனைகளை செல்ல பிராணிகளாக வளர்க்க மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், உண்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சீன அரசு நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-பிப்-202021:04:58 IST Report Abuse
அருணா அவரவர்க்கு பிடித்த உணவை சாப்பிடலாம் என்று தலைவர் ஸ்டாலின் சொல்லிஇருக்கிறார். வைரஸ் தலைவர் பேச்சை மீறுகிறது. ஆர்பாட்டம் நடக்குமோ.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-பிப்-202020:44:24 IST Report Abuse
Rajagopal சீமான் இதை எதிர்த்து முழக்கமிட்டார் - நாய், பூனை, எலி, பாம்பு, ஆமை போன்றவற்றைத் தின்பது மனித உரிமை. அதைத் தடுக்க நீங்கள் யார்? வைரஸ் வந்தால் அதற்கு மருந்து கண்டுபிடிப்போம். அதற்கு பதிலாக நாங்கள் புல்லையா தின்போம்? சீனாவில் இஸ்லாமியர்களைக் கூண்டுக்குள் வைத்து சித்தரவதை செய்கிறார்கள். கொரோன வைரஸ் வந்தது அதனால்தான். இதை மூடி மறைக்கப் பார்க்கிறது பாஜக அரசு. திராவிடக் கட்சிகளும் இதை அறிந்து கொண்டே, CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் அணி வகுக்கையில், வெறும் பிரியாணி மட்டும் சமைத்துக் கொடுத்து விட்டு, பாஜகவிற்கு மறைமுக ஆதரவு கொடுக்கிறார்கள். நாம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடு பட்ட போது, இஸ்லாமியர்கள் பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுத்தார்கள். சீனாவோ இஸ்லாமியர்களை வதைக்கிறது. அங்கு பிரியாணி கிடைக்காமல், அனைவரும் எலிகளையும், பூனை, நாய்களையும் தின்னும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். கொரோன வைரஸ் வந்தது இதனால்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பிரியாணியை தேசிய மயமாக்குவோம் என்று முழங்கினார்.
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
27-பிப்-202021:59:19 IST Report Abuse
SaiBabaகொஞ்சம் தலை சுத்துது, ஆனா நீங்க சரியா பாலோவ் பண்ணி இருக்கீங்க...
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-202019:51:03 IST Report Abuse
Babu சீனாகாரன் கண்டதை தின்கிறதால (முக்கியமா அசைவம்,ஹராம், தெய்வீக விலங்குகள்) தான் கொரோனோலாம். இந்தியா தெய்வீக மற்றும் சாத்வீக நாடு அப்படிங்றதினால நோய், வாந்திபேதி, கற்பழிப்பு, கொலை,கொள்ளை அப்படின்னு எதுவும் வந்தது கிடையாதாம்(முக்கிய மதக் கிறுக்கர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X