புதுடில்லி: டில்லி கலவரத்திற்கு ஆம்ஆத்மி, காங்., கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பிரசாரத்தை எதிர்கட்சிகள் தவறான முறையில் மக்களிடம் கொண்டு செல்கிறது. இதன் காரணமாக டில்லியில் கலவரம் நடந்துள்ளது. காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். வன்முறைக்கு ஆம்ஆத்மியும் ,காங்கிரசும் தான் காரணம். ஆம்ஆத்மி கவு்னசிலர் தாகீர் உசேன் வீட்டின் மேற்கூரையில் பெட்ரோல் குண்டுகள், கற்கள் இருந்தது. மேலும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ ஆதாரம் உள்ளது.
பாகிஸ்தான் சென்ற மணிசங்கர் அய்யர் நாங்கள் ஷாகீன்பாக்கை நம்பி உள்ளோம். இது போல் சசிதரூர், சல்மான்குர்ஷித் ஆகியோரும் இது போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

வன்முறை ஏற்பட்டுள்ள டில்லியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதுதான் ஆரோக்கியமான அரசியல் ஆகும். தற்போது டில்லியில் அமைதி ஏற்பட்டுள்ளது. இது தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.டில்லி கோர்ட் நீதிபதி முரளிதர் கொலிஜியம் பரிந்துரையின்படி தான் மாற்றப்பட்டுள்ளார். இதில் அரசியல் நோக்கம் ஏதுவும் கிடையாது.
இவ்வாறு ஜவடேகர் கூறினார்.