பொது செய்தி

இந்தியா

தீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில் கலவரத்தின் போது பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.latest tamil newsடில்லியின் வடகிழக்கு பகுதியில் பிரிஜ்புரி சாலையில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3000 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிப்.,25 அன்று, காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிந்து சென்ற பிறகு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇது பற்றி பள்ளியின் காசாளர் நீத்து சவுத்ரி கூறுகையில், மாலை 4 மணியளவில் சுமார் 250 முதல் 300 பேர் அனைத்து பக்கமும் இருந்து பள்ளிக்குள் வந்துள்ளனர். ஒன்றும் புரியாத காவலாளி, உயிரை காப்பாற்றிக் கொள்ள பின் கேட் வழியாக தப்பிச் சென்றுள்ளார். பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தோம். ஆனால் பதற்றமான நிலை காரணமாக இரவு 8 மணிக்கே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர் என்றார்.


latest tamil newsஇதில் நூற்றுக்கணக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள், ஆவணங்கள் ஆகியன சாம்பலாகி உள்ளன. மேஜை, நாற்காலிகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு பின் பள்ளிக்கு சென்று பார்த்த பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்து பொருட்களும் சாம்பலாகி உள்ளதை கண்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
01-மார்-202015:23:17 IST Report Abuse
Ray ஏடு தந்தானடீ தில்லையிலே அதை பாட வந்தேனடி அவன் எல்லையிலே
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
29-பிப்-202008:31:49 IST Report Abuse
Pannadai Pandian இப்படித்தான் அந்தக்காலத்தில் மூர்கள் நாளந்தா பல்கலை கழகத்தை கொளுத்தி அங்குள்ள ஊளை சுவடிகள், பொக்கிஷங்கள் என்று அழித்தார்கள். அந்த நிகழ்வு ஒரு மாத காலம் நீடித்தது…...மூர்க்கர்களுக்கு வெள்ளைக்காரன் தான் லாயக்கு….பதிலுக்கு பதில் தருவான்….
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
29-பிப்-202003:35:59 IST Report Abuse
kalyanasundaram WHAT A GREAT SERVICES TO PUPIL BY THESE THIRD RATE POLITICAL PARTIES AS WELL THEIR CHAMCHAS
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X