கொரோனா வைரஸ்: உலக நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம்

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

பீஜிங் : சீனாவில் உருவாகி, 37 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் செயல்பாடுகளை புரட்டி போட்டுள்ளது.latest tamil news


கொரோனா வைரசிற்கு சீனாவில் 2800 பேர், ஈரானில் 26 பேரும் பலியாகி உள்ள நிலையில் ஜப்பானில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவுவதை தடுக்க மார்ச் 2 வரை ஜப்பானில் உள்ள பள்ளிகளை மூட அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா அரசு, இஸ்லாமிய மக்கள் புனித தலமான மெக்கா, மெதீனா நகர்களுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்துள்ளது. வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு வரவும் தடை விதித்துள்ளது. மெக்கா நகருக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 1.8 பில்லியன் மக்கள் வந்து செல்வது வழக்கம்.


latest tamil news
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்ற போதிலும், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செயல்படும் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பணவீக்கத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்படும் மூலப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ நகரில் பள்ளிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-பிப்-202009:16:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni உலகிலே எங்கெல்லாம் ஏழ்மையும் ஏழைகளும் அதிகமோ அங்கெல்லாம் சுத்தம் சுகாதாரம் ஜீரோ நம்ம நாட்டுலேயும் வறுமை யின் %ரொம்பவேதிக்கம் நாமும் ஜாக்கிரதையா இருக்கவேண்டும் தினம் எல்லோரும் நிலவேம்புகஷாயம் குடிக்கவும்
Rate this:
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
27-பிப்-202020:41:03 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam The alleged biological weapons have boomeranged on them.Probably they have failed in their attempt in finding the antidote.
Rate this:
Cancel
27-பிப்-202020:38:39 IST Report Abuse
ஆப்பு நம்ம நாட்டுலே கொரோனா வைரஸ் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X