மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பூமியைச் சுற்றி வரும் புதிய, 'குட்டி நிலவு' ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம்.
இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது. இது பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும்.


latest tamil news



இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்றது. அதேபோல், 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது.
சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் ஆதிக்கம் குட்டி நிலவின் மீது இருப்பதால், அதன் பாதை எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
28-பிப்-202015:32:43 IST Report Abuse
Sampathkumar Sampath அது தான்யா நம்ம கைலாஸா....... அண்டர்ஸ்டாண்ட். இப்ப வந்து புடிங்கோ பாப்போம்... யூ கேன் நாட் கேட்ச் மீ....ஹா ஹா ஹாஆ...............இத நான் சொல்லலையா. நம்ம சத்சங்கம் சொல்லுதுயா..... அண்டர்ஸ்டாண்ட்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-பிப்-202011:59:10 IST Report Abuse
S.Baliah Seer இது குட்டி நிலா இல்லை.இதன் விட்டம் 6 அடி முதல் 12 அடிக்குள் உள்ள Asteroid .அதாவது பெரிய விண்கல்.பொதுவாக வின் கற்கள் வட்டமாக இருப்பதில்லை. இது வட்டமான விண்கல்லாய் இருப்பதால் குட்டி நிலா என்று MPC ( Minor Planet Center ) பெயரிடுகிறது.பூமி சூரியன் ஆதிக்கத்தால் இவை திடீரென்று காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
28-பிப்-202010:49:42 IST Report Abuse
swega அந்த சிறு (பான்மை) நிலாவை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய சுடலை கூடிய விரைவில் உறுதியேற்பார். ஓசி பிரியாணி தலைவரும் குருமாவும் முன்மொழிவார்கள். ஆண்டவர் அந்த நிலவை ஆழ்வார்பேட்டைக்கு அழைப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X