பொது செய்தி

இந்தியா

டில்லி கலவர வழக்கு: விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 டில்லி கலவர வழக்கு, விசாரிக்க, 2 சிறப்பு விசாரணைக்குழு

புதுடில்லி: வடகிழக்கு டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து, டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல், டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


latest tamil news



இந்த மோதல் கலவரமாக மாறியதில் இன்று வரை 35 பேர் பலியாகியுள்ளனர். கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 18 எப்ஐஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


2 சிறப்பு விசாரணை குழுக்கள்



இந்நிலையில் கலவர வழக்கை விசாரிக்க இரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், டில்லி கலவர வழக்கை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.கே. சிங் மேற்பார்வையில், குற்றப்பிரிவின் கீழ் ஜோய் டிர்கி, ராஜேஷ் தியோ ஆகிய இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 18 எப்.ஐ.ஆ.ர்கள் மற்றும் கைதான 106 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கை விவரங்கள் இரு சிறப்பு விசாரணைக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு துணை கமிஷனர்களும் உடனடியாக பொறுப்பேற்றனர்.


துணை நிலை கவர்னர் ஆய்வு


தற்போது கலவரம் பாதித்த வடகிழக்கு பகுதி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் உள்துறை செயலாளர், சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
28-பிப்-202010:50:55 IST Report Abuse
Ab Cd அனைத்து சமூகத்தினரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-பிப்-202005:07:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஓட்டுப்போட்டு கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சி எம் ஆக்கின டெல்லிகுசும்பணுக்களுக்கு நல்லாவேண்டும் அறிவாளிகள் ஓட்டுபோடலே என்பது பலரின்கருத்து வோட்டுப்பதிவானது 61%தான் , ஆனால் இதனால் டௌட் தனபாலுக்கு எதனால் டௌட் வரலே இதுலே எவ்ளோ ஓட்டுக்கள் நாட் ரியல் என்று ??????
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
27-பிப்-202022:03:52 IST Report Abuse
GMM அமெரிக்க அதிபர் இந்திய நாட்டில் இருக்கும் போது இந்திய, அமெரிக்க, இஸ்ரேல்... போன்ற முக்கிய உளவு துறை அதிகாரிகள் 360° கோணத்தில் 24 x 7 நேரம் படம் பிடித்து இருப்பார்கள். கெஜ்ரிவால் ஒரு முதல்வர் மனம் போல் ஆட்சி செய்ய முடியும் என நினைப்பு. மாநில அரசு அதிகாரிகள் துறை சார்ந்த விதிமுறைகள் பின்பற்றி பணி புரிந்து வருகிறார்களா என்று மத்திய அரசு மாநில அரசை மேற்பார்வை செய்தால் போதும். நீதிமன்றஊழியர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு பணி விதிகள் உள்ளன.
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
27-பிப்-202023:10:26 IST Report Abuse
Ab Cdகாவலர்கள், உள்துறை அதிகாரிகள் துறை சார்ந்த விதிமுறைகள் பின்பற்றி பணி புரிந்து வருகிறார்களா? அதுதானே கலவரத்திற்கு காரணம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X