பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி உடல் தகனம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
DINAMALAR, Trichy, Subbulakshmi , RR Ragavan, தினமலர், பங்குதாரர், ஆர்.ராகவன், மனைவி, சுப்புலட்சுமி,  காலமானார், இறுதி, ஊர்வலம்,

இந்த செய்தியை கேட்க

திருச்சி: தினமலர் பங்குதாரரான மறைந்த ஆர்.ராகவனின் மனைவி சுப்புலட்சுமி (77) நேற்று காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ள திருமங்கையாழ்வார் மன்னன் படித்துறையில், தகன கிரியை நடந்தது.

தினமலர் பங்குதாரரும் காலம் சென்ற ஆர்.ராகவனின் மனைவியும் தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் ஆசிரியர் முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாய் சுப்புலட்சுமி, நேற்று(பிப்.,27) மாலை 4:30 மணிக்கு திருச்சியில் காலமானார்.
இறுதிச்சடங்குகள், இன்று மதியம் 3 மணிக்கு திருச்சி கன்டோன்மென்ட், பேர்ட்ஸ் ரோடு இல்லத்தில் நடைபெற்றது. இறுதி ஊர்வலம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டது. ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் திருமங்கையாழ்வார் மன்னன் படித்துறையில் மாலை 5 மணிக்கு, தகனக்கிரியைகள் நடைபெற்றது. முன்னதாக, மறைந்த அம்மையாரின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.



latest tamil news




முதல்வர் இரங்கல்


முதல்வர் பழனிசாமி அறிக்கை: தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயார் சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.சுப்புலட்சுமி, தன் கணவர் ராகவன் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், பக்கபலமாகவும், மகன்களுக்கு நல்ல தாயாகவும் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினமலர் குழுமத்திற்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கி றேன்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.


துணை முதல்வர் இரங்கல்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 'சுப்புலட்சுமி மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்' என தெரிவித்துள்ளார்.


ஸ்டாலின் இரங்கல்


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:'தினமலர்' பங்குதாரர், மறைந்த ஆர்.ராகவனின் மனைவியும், 'தினமலர்' திருச்சி, வேலூர் பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான, ஆர்.சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும்பணியில் ஈடுபட்டுள்ள, 'தினமலர்' பத்திரிகையின் வளர்ச்சிக்குத் துணை நின்ற, ஆர்.சுப்புலட்சுமியை இழந்து தவிக்கும், ராமசுப்பு, கோபால்ஜி ஆகியோருக்கு, என் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-பிப்-202019:02:38 IST Report Abuse
அசோக்ராஜ் தாய் நாட்டுக்கும் தாய் மொழிக்கும் தலைமுறைகளாக சேவை செய்து வரும் புகழ் மிக்க தினமலர் குடும்பத்தில், பெருவாழ்வு வாழ்ந்த தாய்மார்களில் ஒருவரை இறைவன் அழைத்துக் கொண்டான். அன்னாருக்கு நம் அஞ்சலி. அன்னாரை இழந்து வாடும் உறவினர், நண்பர், மற்றும் பத்திரிகை குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி 🙏
Rate this:
Cancel
G.VIJAYABASKAR - Tiruchchirappalli,இந்தியா
28-பிப்-202018:42:59 IST Report Abuse
G.VIJAYABASKAR அன்னையாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
28-பிப்-202017:35:02 IST Report Abuse
mrsethuraman  ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X