சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இந்தியா முழுவதும், அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது. நாட்டின் தலைநகரே, வன்முறையின் பிடியில் சிக்கியுள்ளது. டில்லியில் நடக்கும் கலவரங்களைப் பார்க்கும் போது, யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

'டவுட்' தனபாலு: இதைத் தான், 'பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது' என, தமிழகத்தில் சொல்வரோ; இது போன்ற பதற்றமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான், டில்லியில், காங்., ராகுல், தமிழகத்தில் உங்கள் தலைமையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில், ஏற்பாடுகள் நடந்தன என்பது, தமிழக நடுநிலையாளர்களுக்கு தெரியாது என நினைத்து, இவ்வாறு பொய்யான வருத்தம் தெரிவிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


பத்திரிகை செய்தி: நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு, அடுத்த மாதம் துவங்கும். இருவரும், 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர்.

'டவுட்' தனபாலு: நடிகர் கமல், கட்சி துவக்கி, மூன்றாண்டுகள் ஆகியுள்ளன. அதற்குப் பிறகு கூட, பல படங்களில் நடித்து விட்டார். அதுபோல, நடிகர் ரஜினி, அடுத்த ஆண்டு, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், படம் ஓடுகிறதோ இல்லையோ, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதைப் பார்க்கும் போது, 'இவர்கள் நடிக்கப் போகின்றனரோ அல்லது அரசியலில் குதிக்கப் போகின்றனரோ அல்லது தமிழக மக்களை ஏமாற்றுகின்றனரா என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கிராமப்புறங்களில், 15 ஆண்டுகளில், நீரிழிவு நோய், 300 சதவீதம் அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு காரணம். நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை. உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே, 'பிட்' ஆன உடல் தகுதியுடன், நீண்ட ஆயுளுடன், ஏராளமான செல்வம், வசதி, வாய்ப்புகளுடன் உள்ளனர்; ஒருவருக்குக் கூட, தொப்பை கிடையாது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் ஏன் கற்றுக் கொடுப்பதில்லை என்ற, 'டவுட்' எனக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
28-பிப்-202011:54:48 IST Report Abuse
Aaaaa தனபால் என்று பெயர் இருந்தாலே வில்லங்கம்தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X