சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வெறி தாக்குதலை காங்., மறைக்கிறது!

Added : பிப் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 வெறி தாக்குதலை காங்., மறைக்கிறது!

வெறி தாக்குதலை காங்., மறைக்கிறது!

டி.எஸ்.சுகுமாறன், வேலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'டில்லி கலவரத்தைப் போல, பயங்கரம் நடந்ததேயில்லை' என்று, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் கண்டித்து, அறிக்கைகள் வெளியிட்டு, உற்சாகமான அதிர்ச்சியை, சோக முகத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.இவர்கள் எல்லாம், 1984, அக்., 31 அன்று, பிரதமராக இருந்த இந்திரா, தன் மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரசிலிருந்து ஒரு கொலை வெறிக்கூட்டம், அக்., ௩௧, நவ., ௧, ௨, ௩ ஆகிய நாட்களில், டில்லியில் நடத்திய மிகப்பெரிய கொலை வெறித் தாக்குதலை, அக்கட்சியே தற்போது மறைக்கிறது.சீக்கிய பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, ஆயிரக்கணக்கானவர்கள், கொன்று குவிக்கப்பட்டனர். கொலைக் கும்பல்கள், சீக்கியர்கள் வாழும் பகுதிகளை சூறையாடி, பிணங்களை, லாரியில் வாரி குவித்தன; பெட்ரோல் ஊற்றி எரித்தன. அரசியல் வரலாறு தெரிந்தவர்கள், அவ்வளவு எளிதில் இவற்றை மறந்திருக்க முடியாது. இந்திய வரலாறு இதை எப்படி மறைக்க முடியும்?வரலாற்றை தங்களின் சுய அரசியல் லாபத்திற்காக மாற்றி, இப்போது நடந்த டில்லி கலவரத்தை பூதாகரமாக்கி, மிகப் பெரிய ஒப்பாரி வைத்து, நரிகளைப் போல ஓலமிடுகின்றன, இந்த பச்சோந்தி அரசியல் கூட்டங்கள்.
ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், 'வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். உளவுத்துறை தோல்வி அடைந்ததால், உள்துறை இந்தக் கலவரத்தை அடக்க இயலாமல் போயுள்ளது. ஒரு சில கட்சிகள், அரசியல் செய்து, மத உணர்வுகளையும், வன்முறையையும் துாண்டி வருவது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.
அவரவருக்கு தேவையானவற்றை கையில் எடுத்து, 'மோடிக்கெதிராக ரஜினி போர்க்கொடி துாக்கி விட்டார்' என்றும், அவர் பேசியதன் அர்த்தம் புரியாமல், 'மக்கள் நீதி மைய' கமலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, 'வெகுஜன மக்களின் ராஜபாட்டைக்கு திரும்பி வாருங்கள்' என, அழைப்பு விடுத்துள்ளதும், 'காமெடி!''இந்த நாட்டின் இஸ்லாமிய மக்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தால், ஒரு துளியும் ஆபத்தில்லை' என்று, தெளிவாக அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும், ஏன் தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரும் சொல்லிய போதும், இந்தப் பிரச்னையை கையிலெடுத்து, பெரிய அளவில் வெறியாட்டத்தை நாடெங்கிலும் நிகழ்த்தி வரும் அரசியல் கட்சியினர், மோடியை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கின்றனர்.பயங்கரவாதிகளை விட மோசமாக, நாட்டுக்கே துரோகம் செய்யும் நச்சுப் பாம்புகளை, ரஜினி சொல்வது போல, இரும்புக்கரம் கொண்டு அடக்கி, பொய்யர்களை வீழ்த்தி, வீரத்துடன் தேசம் எப்போதும் போல, நிமிர்ந்து நிற்கட்டும்!

சூரியனை பார்த்துநாய் குரைப்பதுபோன்று கருதணும்!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பார்ப்பனர்களை பிராமண நாய்' என, பொது மேடையில் தி.மு.க., வழக்கறிஞர் ஒருவர் பேசியுள்ளார். இதற்கு, பிராமணர்கள் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்த தேவைஇல்லை.சூரியனைப் பார்த்து, நாய் குரைத்தால், சூரியன் சும்மா தானே இருக்கும். குரைக்கின்ற நாய்க்கெல்லாம், சூரியன் பதில் தந்து கொண்டிருந்தால், அது, தன் வேலையை பார்க்க முடியாது. சூரியனைப் போல் பிராமணர்கள் பொறுமை காக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். வேறெந்த சமூகத்தையும் தரக்குறைவாக பேசி, மேடையை விட்டு கீழே யாரும் இறங்க முடியாது.
தமிழகத்தில் தான் பிராமணர்களை, திராவிட இயக்கத்தினர் திட்ட முடியும். தமிழக எல்லையை தாண்டினால், இவர்கள் பருப்பு வேகாது.வேறெந்த மாநிலத்திலும் போய், பிராமண சமூகத்தை தரக்குறைவாக பேசினால், 'டின்' கட்டி விடுவர். திட்டு வாங்குவதற்காக, பிராமணர்கள் ஆவேசப்பட தேவையில்லை. அப்படி ஆவேசப்பட்டால், அவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டது போலாகி விடும்.நாய்க்கே ஜாதி பட்டம் சூட்டுவோர் தான், ஈ.வெ.ரா., பாசறையிலிருந்து வந்தோர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையிடம் இருந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவற்றை கற்று தேர்ந்த அறிவி ஜீவிகள், திராவிட இயக்கத்தினர்.நாட்டு மக்கள், இவர்கள் ஈடுபடும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.திராவிட கட்சியினர் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக மதித்து, பதிலுக்கு பிராமணர்கள் குரல் எழுப்ப தேவையில்லை!

ஹிந்துக்களுக்குஎதிரான சதிகள்நடந்திருக்காது!

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்தியாவில், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கிய, பவுத்தம், ஜைனம், பார்சி, யூதம் என, எட்டு மதங்கள் இருக்கின்றன.இதில், கிறிஸ்துவரை தவிர, மற்ற ஏழு மதத்தினரில் யாருமே ஊர் ஊராக சென்று தங்கள் மதங்களை பிரசாரம் செய்வதும் இல்லை; பிறரை தங்கள் மதத்திற்கு இழுக்கும் வேலையிலும் ஈடுபடுவதும் இல்லை.தமிழகத்தில், அரசியல்வாதிகள் சினிமா நடிகர்கள், மதவாதிகள் என, ஒரு கூட்டமே, ஹிந்து மதத்திற்கு எதிராக கிளம்பிஇருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் ஹிந்து மத எதிர்ப்புக் கொள்கைகள் பரவி வருகின்றன.'சிறுபான்மை மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை' என்ற தவறான ஒரு கருத்தை பரப்பி, தமிழகத்தில் மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் முயற்சியில், சில அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உண்மையில், பெரும்பான்மையினருக்கு தான் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இங்கு நிலவி வருகிறது.இந்திய அரசியலமைப்பு சட்டம், குடிமக்களுக்கான ஆறு அடிப்படை உரிமைகளை நிர்ணயித்திருக்கிறது.அதில், 'சட்டப்பிரிவு 15ல், ஜாதி மதம், இனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது' என, கூறப்பட்டிருக்கிறது. அதுபோல, பிரிவு 25ல், தங்களுக்கு இஷ்டப்பட்ட மதத்தைப் பின்பற்றிக் கொள்ளும் உரிமையை அனைவருக்கும் அளித்துஇருக்கிறது.
ஆனால், ஆசை வார்த்தை காட்டி, அப்பாவிகளை தங்கள் மதங்களுக்கு இழுத்துச் செல்லும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை.மோகன் லாசரஸ் என்ற மதபோதகர், 'ஒவ்வொருவரும், ஒரு ஹிந்துவை மதம் மாற்றினால், மூன்று ஆண்டுகளில், தமிழகத்தையே கிறிஸ்துவ மாநிலமாக மாற்றி விடலாம்' என்ற அர்த்தத்தில் பேசி இருக்கிறார்.தமிழகத்தில், 2002ல் கடுமையான தண்டனை விதிக்கும் அளவுக்கும் மத மாற்ற தடை சட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். கடந்த, 2004ல் லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாகவும், கருணாநிதி போன்றோரின் தவறான பிரசாரத்தாலும், அந்த சட்டம் கைவிடப்பட்டது.அது, நடைமுறையில் இருந்திருந்தால், மோகன் லாசரசுகள் தமிழகத்தில் உருவாகியிருக்க மாட்டார்கள்; ஹிந்துக்களுக்கு எதிரான சதிகளும் நடந்திருக்காது!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
03-மார்-202008:51:17 IST Report Abuse
venkat Iyer நமக்கு மேல் ஒரு மிகப்பெரிய சக்தி நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நம்மால் கமல் உண்மையில் புத்திசாலி அல்ல. திறமை இருந்தும் அவரது படம் தமிழகத்தில் ஓடாது அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் ரஜினி ஆன்மிகத்தினை ஒரு கையிலும் அரசியலை மற்றுமொரு கையிலும் எடுத்து வரும் நிலையில் வெற்றி பெறுவார்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
28-பிப்-202020:36:04 IST Report Abuse
karutthu 2002ல் கடுமையான தண்டனை விதிக்கும் அளவுக்கும் மத மாற்ற தடை சட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்........ இப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது முதல்வர் ஈ பி எஸ் அதை தொடரலாமே
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
28-பிப்-202020:24:41 IST Report Abuse
karutthu காரணமில்லாமல் பிராமணர்களை பழிப்பவன் நாக்கு அழுகிவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X