பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : பிப் 27, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 28, 1963 டாக்டர் ராஜேந்திர பிரசாத்:

பீஹார் மாநிலம், சிவான் எனும் இடத்தில், மகாவீர சாகி -- கமலேசுவரி தேவி தம்பதிக்கு மகனாக, 1884 டிச., 3ல் பிறந்தார். பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால், 1942ல் கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறைவாசத்திற்கு பின், 1945 ஜூன், 15ல் விடுதலையானார். கடந்த, 1946ல் இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ல் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக, 1950ல் பதவியேற்றார். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில், இரு முறை ஜனாதிபதியாக பதவியேற்ற, ஒரே தலைவர், ராஜேந்திர பிரசாத். அவருக்கு, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர், 1963 பிப்., 28ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X