பொது செய்தி

தமிழ்நாடு

காட்டில் ரஜினி சாகசம்: மார்ச், 23ல் ஒளிபரப்பு

Added : பிப் 27, 2020
Share
Advertisement
காட்டில் ரஜினி சாகசம்: மார்ச், 23ல் ஒளிபரப்பு

சென்னை : டிஸ்கவரி, 'டிவி'க்காக, காட்டில் ரஜினி பங்கேற்ற சாகச நிகழ்ச்சி, மார்ச், 23ல் ஒளிபரப்பாக உள்ளது.டிஸ்கவரி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும், 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி, உலகம் முழுக்க பிரபலம். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், காட்டில் தனியாக சிக்கினால் எப்படி உயிர் பிழைப்பது என்பதை விளக்கும் வகையில், இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும்.
இயற்கை வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், சமீபத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு, மைசூரு பந்திப்புரா புலிகள் காப்பகத்தில், ஜன., 28, 29ல் நடந்தது. இதில், நடிகர் ரஜினி பங்கேற்றார். அதில், நீர்நிலைகள் புனரமைப்பு குறித்து, ரஜினி பேசியுள்ளார். 'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்ற பெயரில், தயாரிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மார்ச், 23ல், ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என, டிஸ்கவரி, 'டிவி' தங்களது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளது

.அத்துடன், புதிய டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ரஜினி ஸ்டைலாக வண்டி ஓட்டி வருவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த, டீசர்கள் விரைவில் வெளியாக உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X