வாட்ஸ்ஆப், டுவிட்டர், டிக்டாக் மீது தெலுங்கானா போலீசார் எப்.ஐ.ஆர்.

Updated : பிப் 27, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாட்ஸ்ஆப், டுவிட்டர், டிக்டாக்  மீது தெலுங்கானா போலீசார் எப்.ஐ.ஆர்.

ஐதராபாத்: சமூக வலைதளங்கள் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் தெலுங்கானா போலீசார் டுவிட்டர், வாட்ஸ்ஆப், டிக்டாக் ஆகிய சமூக வலைதளங்கள் மீது எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஐ தாராபாத் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



இச்சட்டத்தை எதிர்த்து கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் சில சமூக விரோத சக்திகள் 12-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குருப் பயன்படுத்தியும் , டுவிட்டரில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை ஆங்கிலம், உருது, அராபிக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் விமர்சித்தும் வதந்தியையும் பரப்பி வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும் டிக்டாக் மூலம் அரசியல் தலைவர்களை கிண்டலுக்கும் வீடியோக்களை பதிவேற்றுகின்றனர். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.
புகாரையடுத்து வாட்ஸ்ஆப், டுவிட்டர், டிக்டாக் ஆகிய சமூக வலைதளங்கள் மீது ஐ தராபாத் போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-பிப்-202004:48:00 IST Report Abuse
 nicolethomson அருமை அப்படியே தூக்கி உள்ள வைப்பீங்களா?
Rate this:
Share this comment
Cancel
Desi - Chennai,இந்தியா
28-பிப்-202000:56:17 IST Report Abuse
Desi WhatsApp and Twitter are the primary transmission sources of fake news
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
27-பிப்-202022:05:31 IST Report Abuse
S.Ganesan WhatsApp மூலம் பற்பல நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவது எல்லோரும் அறிந்ததே. அதுவும் எந்த செய்தி ஆனாலும் அதை எப்படியாவது , மோடியை சம்பந்தப்படுத்தி சந்தோஷப்படுபவர்கள் பலர் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X