ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்கு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 27, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி: வன்முறைகள் தொடர்பாக டில்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக 365 மற்றும் 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது தொழிற்சாலைக்கும் டில்லி போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள்.



latest tamil news



குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


சாக்கடையில் சடலம்


சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டு கிடந்தார் இவர், மத்திய உளவுத்துறையில், டிரைவர் பணியில் இருந்தவர். இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மா சடலம் கண்டெடுக்கப்பட்டது.


latest tamil news




கற்கள் வீசும் வீடியோ


தாஹிர் உசேன் வீட்டின் மாடியிலிருந்து, பெட்ரோல் குண்டுகள், கற்கள் சிலரால் வீசப்படுவது போன்ற வீடியோ வெளியாகியது. அதில் சிவப்பு ஸ்வெட்டர் போட்டபடி தாஹிர் உசேன் நிற்கிறார். கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் அவர் வீட்டு மொட்டை மாடியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து டில்லி போலீசார் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
28-பிப்-202012:51:25 IST Report Abuse
mindum vasantham காங்கிரஸ் நல்ல ஏத்தி விட்டு ஒரு அமைதியான கொலையை முடிச்சிட்டாங்க
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
28-பிப்-202010:58:27 IST Report Abuse
Rasheel அமைதி மார்க்க கொடூரன் இவன் வீட்டு மொட்டை மாடியில் பெட்ரோல் குண்டுகள், கற்குவியல், உடல் மற்றும் தோலை எரிக்கும் சல்பூரிக் ஆசிட், ஹைட்ரொ கிளோரிக் ஆசிட் பாலிதீன் கவர்களில் குவித்து வைக்கப்பட்டு அப்பாவி மக்களின் மேல் வீச பட்டன.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
28-பிப்-202010:43:17 IST Report Abuse
 Sri,India இன்னமும் எத்தனை போலீசை இந்த நாடு இழக்கப்போகிறதோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X