பாலகோட் உணர்த்தும் பாடம்

Added : பிப் 27, 2020
Share
Advertisement
  பாலகோட் உணர்த்தும் பாடம்

பாலகோட் உணர்த்தும் பாடம்
பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது, எப்படிப்பட்ட தாக்குதலை இந்தியா நடத்தியது என்பதை பாகிஸ்தான் நன்கு அறியும். ஆனால், தாக்குதல் தொடர்பான, 'வீடியோ' அல்லது படங்களை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், தாக்குதலை பாக்., மறுக்க, அதை இந்தியா மறுக்க, இரு தரப்பிலும் தகவல் போர் உருவானது. அதனால், இனி போர் இழப்பு மதிப்பீடு, தகவல் சேமிப்பு ஆகியவற்றுக்கான திறனை நாம் மேம்படுத்திக் கொள்வது அவசியம். பாலகோட் தாக்குதல் இதைத் தான் உணர்த்துகிறது. ஆர்.கே.எஸ்.பதவுரியாவிமான படை தலைமை தளபதி
டில்லியை விட பஞ்சாப் உசத்தி

டில்லி வளர்ச்சிக்கு, ஆம் ஆத்மி அரசு செய்ததை விட, பஞ்சாப் முன்னேற்றத்திற்கு, என் தலைமையிலான அரசு அதிகம் செய்துள்ளது. டில்லியில், வர்த்தக நிறுவனங்களுக்கு, 1 யூனிட் மின்சாரத்திற்கு, 10.90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, பஞ்சாபில், 7.75 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு, தனியாரை விட, அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. டில்லியை விட, பஞ்சாபில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அதனால், அனைத்து விதத்திலும் உயர்ந்து நிற்கும் பஞ்சாபை, டில்லியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.அம்ரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர், காங்கிரஸ்
வதந்தியை நம்ப வேண்டாம்!
சமூக வலைதளங்களில் நடைபெறும் விஷமப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். அவற்றில் வரும், ஆதாரமற்ற வதந்திகளை பிறருக்கு பகிராதீர்கள். டில்லியில் சுமுகமான சூழலை ஏற்படுத்த, அரசும், போலீசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனால், மாநிலத்தில் அமைதி திரும்பவும், மக்களிடம் நல்லிணக்கத்தை தொடர்ந்து பராமரிக்கவும், போலீசுக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள். அரசு வெளியிடும் உத்தரவு மற்றும் ஆலோசனைகளை கேட்டு பின்பற்றுங்கள். அனில் பைஜால்லெப்டினன்ட் கவர்னர், புதுடில்லி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X