தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் கெஜ்ரிவாலுக்கு எதிராக மனு

Added : பிப் 27, 2020
Share
Advertisement
 தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் கெஜ்ரிவாலுக்கு எதிராக மனு

புதுடில்லி,: தேர்தல் விதிகளை மீறி, பிரசாரம் செய்ததாக, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா ஆகியோருக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மனு தாக்கல்இங்கு, முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில், இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கெஜ்ரிவாலும், சிசோடியாவும் களமிறங்கிய தொகுதிகளில், அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், நீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் நடைபெறுவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், விளம்பரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், விதிகளை மீறி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியாவுக்கு ஓட்டளிக்க கோரி, பல இடங்களில், பேனர்கள், பதாகைகள், போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. உத்தரவுதேர்தல் நடைபெற்ற தேதி வரை, அவை அதே இடத்தில் இருந்தன. அவர்களின் அந்த காரியம், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் செயலற்றதாக ஆக்கிவிட்டது. ஆகையால், விதிகளை மீறிய அவர்கள் இருவரின் வெற்றியும் செல்லாது என அறிவித்து, அவ்விரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சிசோடியாவுக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிபதி வி.கே. ராவ், அவருக்கும், தேர்தல் ஆணையத்தின் ஊடக கண்காணிப்பு குழு, தேர்தல் அதிகாரி ஆகியோருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பினார். இந்த மனு தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.கெஜ்ரிவாலுக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, மனுவில் இருக்கும் தவறுகளை திருத்தி தருமாறு மனுதாரரிடம் கூறினார். இந்த மனு மீது, அவர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X