இந்தியா

'சயனைடு' கொலைகாரி ஜோலி தற்கொலைக்கு முயற்சி

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 'சயனைடு' கொலைகாரி, ஜோலி தற்கொலை,முயற்சி

கோழிக்கோடு : கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைதான ஜோலி, தற்கொலைக்கு முயன்றதால், அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.


latest tamil newsசந்தேகம்


இங்கு, கோழிக்கோடு அருகேயுள்ள கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோலி. கடந்த, 2002- -- 2016 வரை, ஜோலியின் கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உட்பட, ஆறு பேர் இறந்தனர்; குடும்ப சொத்துக்கள், ஜோலியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தன.இதற்கிடையே, ராய் தாமசின் அண்ணன் ரோஜோ, தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் ஆறு பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில் ஜோலி, ஆறு பேருக்கும் சயனைடு கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 2019ல், போலீசார் ஜோலியை கைது செய்தனர்; அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜுகுமார் ஆகியோரும் கைதாகினர்.இந்நிலையில், கோழிக்கோடு சிறையில், ஜோலி நேற்று தற்கொலைக்கு முயன்றார். ஏதோ ஒரு கூர்மையான ஆயுதத்தால், அவர், மணிக்கட்டை அறுத்துக் கொண்டார்.


தீவிர சிகிச்சை


இதையடுத்து, ரத்தம் பீறிட்டுக் கிளம்பிய நிலையில், ஜோலி மயங்கி விழுந்துள்ளார். இதை கவனித்த சிறை ஊழியர்கள், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, ஜோலி, கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜோலிக்கு, கூர்மையான ஆயுதம் எப்படி கிடைத்தது என்பது குறித்து, சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
29-பிப்-202009:21:21 IST Report Abuse
Pannadai Pandian மூணு ஆணிய புடுங்க முடியாத யேசப்பாவே……. காப்பாத்து…..காப்பாத்து…….
Rate this:
Share this comment
Cancel
28-பிப்-202009:08:02 IST Report Abuse
ஸாயிப்ரியா பாரதி காணாத புதுமை பெண். அவசரம் எதற்கு அரசாங்க விருந்தாளியே. உயிர் வலி ,பயம் அனுபவி.
Rate this:
Share this comment
Cancel
28-பிப்-202009:05:52 IST Report Abuse
Arunachalam, Chennai அது எதற்கு பினரயி விஜயன் தலைமையிலான அரசு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X