ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு

Added : பிப் 28, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
MamataBanerjee,WestBengal,Mamata,WB,OneCountryOneRation,மம்தா,மேற்குவங்கம்

கோல்கட்டா : மத்திய அரசின், 'ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தில் இணைவதற்கு, மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. 'ஆயுஷ்மான்' எனப்படும் இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டத்தை செயல்படுத்த மறுப்பு தெரிவித்து வருகிறது.


latest tamil news



இந்த நிலையில், மாநில உணவுத் துறை அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கூறியுள்ளதாவது: ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு உள்ளதால், இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். மாநிலத்தில் ரேஷன் முறையை, 'டிஜிட்டல்' மயமாக்க, ஏற்கனவே, 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம். அதை யார் திருப்பி தருவர். இதைத் தவிர மத்திய அரசு, எங்களுக்கு அளிக்க வேண்டிய, 6,000 கோடி ரூபாயையும் தரவில்லை. கருத்து வேறுபாடு உள்ளதால், ரேஷன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
28-பிப்-202019:15:43 IST Report Abuse
Gopi மேற்கு வங்காளத்து கூலிக்காரன் மற்ற மாநிலத்தில் வந்தால் அவனுக்கு ரேஷன் பொருள் கொடுக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
ramesh babu - chennai,இந்தியா
28-பிப்-202018:12:50 IST Report Abuse
ramesh babu அருமை
Rate this:
Share this comment
Cancel
28-பிப்-202017:47:52 IST Report Abuse
ஆப்பு என்னம்மா இப்பிடி பண்றீங்க... உணவுப் பொருள்களுக்கு லாட்டரி அடிப்பதை ஸ்மார்ட் கார்டு மூலம் தேசிய மயமாக்கப் பாக்குறாரு மோடி. நீங்க உங்க ஆளுங்களை தனியா லாட்டரி அடிக்க உட்டா நியாயமா? பெங்காலிகள் உங்க மாநிலத்தை விட கேரகாவில்தான் நிறைய இருக்காங்களாம். தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X