சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Rahul,Priyanka,Sonia,சோனியா, ராகுல், பிரியங்கா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, கட்சியின் மூத்த தலைவர் அமானதுல்லா கான் ஆகியோர் மீதும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைசி மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கோரி, ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் மும்பை எம்.எல்.ஏ., வான வாரிஸ் பதான் மீதும், டில்லி வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




வெறுப்பு பேச்சை எதிர்த்து புதிய வழக்கு:


பா.ஜ., பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'வெறுப்பு பேச்சைக் கட்டுப் படுத்தும் வகையில், அபராதம் மற்றும் தண்டனையை உயர்த்துவதற்கு, சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இது, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன், கோபால் புரம். ஆஹா ஆஹா அருமை அற்புதம்!! நாட்டிற்க்காக உழைத்த. குடும்பத்தின் போட்டோ அற்புதம். ஏன் எங்கள் விருப்பத்திற்குரிய ROBBER VADRA அவர்களின் படத்தை போடவில்லை. அவர் படம் போடாமல் நல்லாவே இல்லை!!.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
28-பிப்-202014:13:58 IST Report Abuse
blocked user இந்தியக்குடியுரிமை தவிர இவர்கள் வேற்று நாட்டுக்குடியுரிமையும் வைத்திருப்பவர்கள். இவர்களை அமித்ஷா கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்..
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
28-பிப்-202013:40:59 IST Report Abuse
Rahim Gani டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் பாஜக சங்கி கபில் மிஷ்ரா, அனுராக் தாகூர் தான் அவர்களை கைது செய்ய துப்பில்லாமல் கைது செய்ய சொன்ன நீதிபதியை மாற்றி வேறு நீதிபதியை வைத்து அந்த கொலைகாரர்களை விடுவித்து கொண்ட சங்கி படை அடுத்தவர் மீது பழியை போடுகிறது, ஓட்டு மொத்தமாக அழிய போகிறீர்கள் சங்கிகளே........
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
28-பிப்-202018:28:48 IST Report Abuse
தமிழர்நீதி இடம்மாற்றம் பரவாயில்லை ,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X